தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் கருத்து வேதனை அளிக்கிறது: ஜாக்டோ ஜியோ - ஜாக்டோ ஜியோ

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பில் பேசி வருவது அரசு ஊழியர்களான எங்களது மனதை புண்படுத்துகிறது என ஜாக்டோ ஜியோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ ஜியோ

By

Published : Aug 1, 2022, 4:45 PM IST

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், வேலை நிறுத்த போராட்டத்தின் போது போராட்டங்களை நடத்திய நாட்கள் வேலை நாட்களாக அறிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி.

பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பில் பேசி வருவது அரசு ஊழியர்களான எங்களது மனதை புண்படுத்துகிறது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் முறையிட்டுள்ளோம். முதலமைச்சரின் மீது நம்பிக்கை வைத்து நிதி அமைச்சரின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வில்லை.

லட்சகணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கலந்துகொள்ளும் மாநாடு கோரிக்கை மாநாடாக இல்லாமல் நன்றி தெரிவிக்கும் மாநாடாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:வாக்காளர் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதில் திமுகவிற்கு உடன்பாடு இல்லை - ஆர்.எஸ். பாரதி

ABOUT THE AUTHOR

...view details