பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய வெற்றி படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் தற்போது உதயநிதி ஸ்டாலினை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படத்திற்க்கு மாமன்னன் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் இதனை தயாரிக்கிறது. அரசியல் த்ரில்லரான இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 4ஆம் தேதி சேலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடைபெற்று வந்தது.