தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் - just an eyesore social activists regret

தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 24, 2022, 12:36 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் படித்து முடித்துவிட்டு அரசுப் பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகங்களில் 73 லட்சத்து 99 ஆயிரத்து 512 பேர் பதிவு செய்து காத்திருக்கின்றனர் எனவும், அரசுப் பணிக்கான 60 வயதை கடந்தவர்கள் 5,590 பேர் உள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி, கடந்த மாதம் (ஆக.31) ஆம் தேதி வரை வேலைவாய்ப்புக்காக பதிவு செய்த பதிவு செய்தவர்ளின் மொத்த எண்ணிக்கை 73,99,512. இவற்றில் ஆண்கள்- 34,53,380, பெண்கள்- 39,45,861, மூன்றாம் பாலினம்- 271 என பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பதிவு செய்தவர்களின் வயது வாரியான விவரங்களின் படி, 18 வயதிற்குள் உள்ள பள்ளி மாணவர்கள் -23,01,800 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவர்கள்-29,88,001 பேரும், 31 முதல் 45 வயது வரை உள்ள அரசுப்பணி வேண்டி காத்திருக்கும் மேலை நாட்டினர்கள்- 18,68,931 பேரும், 46 வயது முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள்-2,35,190 பேர் மற்றும் 60 வயதிற்கும் மேற்பட்டவர்கள்- 5,590 பேர் என மொத்த பதிவுதாரர்கள் -73,99,512 என முடிவுகள் வெளியாகியிருக்கிறது.

இதில் அரசுப் பணிக்கான 60 வயதை கடந்தவர்கள் 5,590 பேர் உள்ளது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பணியிடங்களை நிரப்புவது என்பது வெறும் கண் துடடைப்பாக உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிங்க: தாய் என நினைத்து வேறு உடலை அடக்கம் செய்த மகன்...மறுநாள் வீட்டுக்கு வந்த தாயை கண்டு இன்ப அதிர்ச்சி

ABOUT THE AUTHOR

...view details