சென்னை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வருவதற்கு நான்கு மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்துக் கட்சிகளும் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதான கட்சிகளான அதிமுக, திமுகவை முந்திக்கொண்டு 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தேர்தல் பரப்புரையை வீரியத்துடன் தொடங்கி இரு கட்சிகளுக்கும் அதிர்ச்சி அளித்தார் கமல்ஹாசன்.
ஏற்கனவே நான்கு கட்ட பரப்புரையை முடித்துள்ள நிலையில் ஜன.,10ஆம் தேதி தனது ஐந்தாம் கட்ட பரப்புரையை கமல்ஹாசன் தொடங்க உள்ளார். ஜன.,13ஆம் தேதி வரை நடக்கும் இந்த பரப்புரை கோவை மாவட்டம் முழுவதும் நடைபெற இருக்கிறது.
அதிமுக கோட்டையாக இருக்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கமல்ஹாசன் பரப்புரை செய்ய இருப்பது அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளதை காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழை