கரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிதீவிரமாக பரவிவரும் சூழலின் முன்களப் பணியாளர்களாக காவல் துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதனால், ஏராளமான காவல் துறையினர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கரோனா தொற்று: சிகிச்சையிலிருந்த 15 காவல் துறையினர் உயிரிழப்பு! - காவல் துறையினர் உயிரிழப்பு
சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 15 காவல் துறையினர் உயிரிழந்தனர்.
தமிழ்நாட்டில் இதுவரை 77 காவல் துறையினர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக தலைநகரான சென்னையில் இதுவரை 3 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கரோனா தொற்றால் பாதிப்பிற்குள்ளான நிலையில், தற்போது 513 காவல் துறையினர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், கரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தால் பாதிப்பிற்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த யானைக்கவுனி போக்குவரத்து புலனாய்வு உதவி ஆய்வாளர் சக்திவேல், கோட்டூர்புரம் நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் கருணாநிதி, அண்ணா நகர் போக்குவரத்துக் காவலர் மகாராஜன், காவல் துறை இயக்குநர் அலுவலக SBCID பிரிவு காவலர் முருகேசன், மதுரவாயில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமார் உள்பட 15 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.