தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 31, 2022, 6:39 PM IST

ETV Bharat / city

பாலியல் தொந்தரவு.. மயில் ரத்தம்.. சாமியார் மீது பெண் பரபரப்பு புகார்!

சாமியார் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக பெண் சாமியார் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சிவன் அழைப்பதாக கூறி சாமியார் பாலியல் தொல்லை
சிவன் அழைப்பதாக கூறி சாமியார் பாலியல் தொல்லை

திண்டுக்கல் மாவட்டம் ஆரோக்கிய மாதா தெரு பகுதியில் வசிப்பவர் பெண் சாமியார் பவித்ரா. இந்தியா முழுவதும் உள்ள கோயில்களில் சென்று தர்மம் செய்வதற்காக தர்மச்சாரியா பட்டம் பெற்றதாகவும், தான் காளி அவதாரம் எனக் கூறியும் வலம் வந்துள்ளார்.

மேலும் அதிருஷ்டம் தன்னிடம் இருப்பதாக கூறி கர்நாடக, பாண்டிச்சேரி, உத்தரகாண்ட் முதலமைச்சர், பாலிவுட் நடிகர் சோனு சூட் உள்பட பல உயரதிகாரிகள் தன்னை சந்தித்து செல்வதாக கூறியுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல் நிலக்கோட்டை காவல்துறையினர் நில மோசடி விவகாரத்தில் பெண் சாமியார் பவித்ராவை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பெண் சாமியார் பவித்ரா தற்போது திண்டுக்கல் மாவட்டம் வீலி நாயக்கன்பட்டியில் ஆசிரமம் வைத்து நடத்தும் தவயோகி தேவபாரதி எனப்படும் திருஞானம் என்ற சாமியார் மீது டிஜிபி அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.

மயில் ரத்தத்தை சுவைத்த திருஞானம்:பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”மன அமைதிக்காக தன்னை சிவன் எனக் கூறிக்கொண்ட திருஞானம் என்ற சாமியாரை அணுகியதாகவும், ஆனால் தன்னை மனவசியம் செய்து பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுப்பதாக பெண் சாமியார் புகாரில் தெரிவித்துள்ளார். தன்னை ஏமாற்றி பணமோசடி செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

சிவன் அழைப்பதாக கூறி சாமியார் பாலியல் தொல்லை

இதுமட்டுமின்றி சட்டவிரோதமாக புலித்தோல், மான் தோல், மயில், போதை பொருள் விற்பனை செய்து வருவதாகவும், அதுமட்டுமின்றி நூறுவருடங்களுக்கு மேல் வாழவேண்டும் என்ற ஆசையில் மயில் ரத்தத்தை திருஞானம் சுவைத்து வருவதாக குற்றம்சாட்டி உள்ளார். இந்த சட்டவிரோத செயல் குறித்து உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் முதலமைச்சர் தனிப்பிரிவு உள்ளிட்ட இடங்களுக்கு புகார் மனுவை அளித்ததாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

பாலியல் தொந்தரவு தரும் திருஞானம்: 98 ஐபிஎஸ் அலுவலர்கள் மற்றும் 98 ஐ.ஏ.எஸ் அலுவலர்களுக்கு போலியாக தன் மீது வழக்குபதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். புகார் அளித்த விஷயம் தெரிந்ததால், சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் 90 கொலை செய்ததாகவும், தன்னையும் கொலை செய்துவிடுவதாக திருஞானம் ஆடியோ மூலமாக மிரட்டியதாகவும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு தரும் திருஞானம் ஆசைக்கு இணங்காததால், தன் மீது நில மோசடி செய்ததாக பொய் புகார் கொடுத்து கைது நடவடிக்கை மேற்கொள்ள வைத்ததாக பெண் சாமியார் பவித்ரா குற்றம் சாட்டியுள்ளார்.

தான் காளி அம்சம் என்பதால், சிவன் எனக் கூறிக்கொண்ட சாமியார் திருஞானம் தன்னோடு வருமாறு அழைத்து பாலியல் துன்புறுத்துவதாக ஆடியோ ஆதாரங்களுடன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கு உடந்தையாக நிலக்கோட்டை சார்பு ஆய்வாளர் தயாநிதி மற்றும் ஆய்வாளர் குரு வெங்கட் ஆகியோர் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறாக பாலியல் தொந்தரவு தரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருபவருமான சாமியார் திருஞானம் இது மற்றும் அவருக்கு உடந்தையாக இருக்கும் காவல் அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவர்கள் மீது முன்னதாக 300 புகார்கள் அளித்துள்ளதாக கட்டுக்கட்டாக புகார்களை கையில் வைத்துக்கொண்டு டிஜிபி அலுவலகம் முன்பு அமர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க:நாடாளுமன்றத்தில் மு.க. ஸ்டாலின்!

ABOUT THE AUTHOR

...view details