சென்னை:வில்லிவாக்கம், செங்குன்றம் சாலை 5ஆவது தெரு பகுதியில் லாவண்யா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
செவிலியராக பணியாற்றி வரும் லாவண்யா, தனது கணவர் ராதாகிருஷ்ணனுடன் எற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆறு மாதங்களாக அவரைப் பிரிந்து, தனது இரண்டு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், வழக்கம்போல லாவண்யா நேற்றிரவு குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு இரவு பணிக்குச் சென்றுள்ளார். இதனையடுத்து, அவரது வீட்டுக்கு இன்று (அக்.31) வந்த ராதாகிருஷ்ணன், காய்கறி நறுக்க பயன்படுத்தப்படும் கத்தியை எடுத்து, தனது ஏழு வயது மகளான வதனா ஸ்ரீயின் கழுத்தை அறுத்துள்ளார்.