தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை - Family suicide.

சென்னை: கொருக்குப்பேட்டையில் இரண்டு குழந்தையை கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை
2 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை

By

Published : Feb 13, 2021, 10:34 PM IST

சென்னை கொருக்குப்பேட்டை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த ஏசி மெக்கானிக் வினோத். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 3 வயதில் கவின், ஒரு வயதில் பிரவின் என்ற இரண்டு ஆண் குழந்தைகள் இருந்தனர்.

கடந்த மாதம் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு கும்மிடிப்பூண்டியில் உள்ள கவிதாவின் தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளனர். அங்கு குடும்பப் பிரச்னை காரணமாக வினோத் இரு குழந்தைகளை அழைத்து கொண்டு தனது வீட்டுக்கு வந்துள்ளார். இதனால் மனமுடைந்த கவிதா தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மனைவியை இழந்த துக்கத்தில் வினோத் தனது இரு குழந்தைகளையும் கொலை செய்து விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வினோத்தின் தம்பி சந்தோஷ் ஆர்.கே.நகர் காவல்துறையில் புகாரளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை கைப்பற்றி உடல்கூராய்வுக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாளாமல் பெற்றக் குழந்தைகளைக் கொலை செய்துவிட்டு தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சேலத்தில் ஆட்டோ ஓட்டுநர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி!

ABOUT THE AUTHOR

...view details