தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தஞ்சையில் டிச., 29ஆம் தேதி பொதுக்கூட்டம்: விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிப்பு - farmers protest announcement in tanjore

தஞ்சாவூரில் டிசம்பர் 29ஆம் தேதி, அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என அதன் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

farmers protest announcement in tanjore
farmers protest announcement in tanjore

By

Published : Dec 26, 2020, 11:21 PM IST

சென்னை:தஞ்சாவூரில் டிசம்பர் 29ஆம் தேதி பொதுக்கூட்டமும், பேரணியும் நடைபெறும் என விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 26) பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், "டிசம்பர் 29ஆம் தேதி தஞ்சாவூரில் 3 மணிக்கு பேரணியும், 5 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகமாக இளைஞர்களும், மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிற இடங்களிலிருந்து விவசாயிகள் வரக்கூடாது, பேரணி நடக்கக்கூடாது; வேண்டுமென்றால் பொதுக்கூட்டம் மட்டும் நடத்திக் கொள்ளுங்கள் என காவல் துறையினர் கூறியுள்ளனர். உச்ச நீதிமன்றம் மற்றும் பல்வேறு தரப்பினர் விவசாயிகள் போராட்டம் நியாயமானது என்று கூறுகின்றனர். ஆனால் தமிழ்நாடு அரசு பேரணிக்கு அனுமதி வழங்காதது நியாயமற்ற செயல்.

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு செய்தியாளர் சந்திப்பு

கொள்முதல் அதிகமாக நடக்கும் இடம் என்றால், இந்தியாவில் பஞ்சாப் தான். எனவே பஞ்சாப் விவசாயிகள் பெருவாரியாகப் போராடி வருகின்றனர். ஆண்டுக்கு இருமுறை அரசு விளைப் பொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யும். ஆனால் இந்த சட்டம் வந்த பிறகு அரசு நிர்ணயித்த விலை கட்டாயம் என்று கூற முடியாது. மேலும் இந்த மூன்று வேளாண் சட்டங்கள் மூலம் வருங்காலத்தில் நியாய விலைக் கடைகள் கூட இல்லாமல் போகலாம். இதனால் தான் விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்” எனத் தெரிவித்தார்.

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details