தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நடிகர் விவேக்கின் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி - நடிகர் விவேக் கரோனா தடுப்பூசி

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நடிகர் விவேக்கின் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி
Actor_Vivek

By

Published : Apr 17, 2021, 7:24 AM IST

Updated : Apr 17, 2021, 6:11 PM IST

நடிகர் விவேக் நெஞ்சுவலி காரணமாக நேற்று (ஏப்ரல் 16) சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு எக்மோ மருத்துவ முறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று (ஏப்ரல் 17) அதிகாலை 4.35 மணியளவில் காலமானார். இதனை மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையடுத்து, விவேக்கின் உடல் விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துவரப்பட்டது. அவரது உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.

நடிகர் விவேக்கின் உடலுக்கு ரசிகர்கள், பிரபலங்கள் அஞ்சலி

அவரது இறப்புக்குத் தலைவர்கள், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்துவருகின்றனர்.

இதையும் படிங்க: காலமானார் ஜனங்களின் கலைஞன் விவேக்!

Last Updated : Apr 17, 2021, 6:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details