கணேஷ் விநாயகன் இயக்கத்தில் தருண்குமார், அபர்ணதி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் தேன். மலைக்கிராமங்களில் கார்ப்பரேட் நிறுவனம் புகுந்தால் அவர்களின் நிலை என்னவாகும் என்பது குறித்து திரைப்படம் பேசுகிறது.
விருதுகளைக் குவித்துள்ள தேன்: வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய தயாரிப்பு நிறுவனம் - release rights of thean film
பல்வேறு விருதுகளை வாரிக்குவித்த தேன் படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கடைக்குட்டி சிங்கம், ஜீவி, சில்லுக்கருப்பட்டி, எல்கேஜி போன்ற திரைப்படங்களை வெளியிட்டுள்ள பிரபல தயாரிப்பு நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
பல்வேறு சர்வதேச விருது போட்டிகளில் திரையிடப்பட்டு இப்படம் பல விருதுகளைக் குவித்துள்ளது. விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெற்றுவருகிறது.
இத்திரைப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான சக்தி ஃபிலிம் பேக்டரியின் உரிமையாளர் சக்திவேலன் கைப்பற்றியுள்ளார்.
இந்நிறுவனம் இதுவரை கடைக்குட்டி சிங்கம், ஜீவி, சில்லுக்கருப்பட்டி, எல்கேஜி, கோமாளி, ஓ மை கடவுளே உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை வெளியிட்டுள்ளது. இத்திரைப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க:”அன்பிற்கினியாள்” வெற்றிபெறும் என்பதில் சந்தேகமே இல்லை - அருண் பாண்டியன்!