சென்னை: கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று (ஏப். 8) சட்டப்பேரவையில் நடைபெற்றது.
அப்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பதிலுரையில், "தற்போது புதிய மின்னணு குடும்ப அட்டைகளை பயனாளிகள் வட்ட வழங்கல் அலுவலகங்கள், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் மண்டல அலுவலகங்கள் மூலமாக பெற்று வருகின்றனர்.
உறுதி செய்யப்பட்ட சேவையினை அளிக்கும் பொருட்டும் நேரடியான தொடர்பினை தவிர்க்கும் பொருட்டும் இந்திய அஞ்சல் துறையின் மூலம் பயனாளிகள் இருப்பிடத்திற்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகள் அனுப்பப்படும்" எனத் தெரிவித்தார்.