சென்னை:விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (27) என்பவர் மதுரவாயல் அருகே உள்ள நூம்பல் பகுதியில் கடந்த 1 ஆம் தேதி காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது கார்மீது அந்த வழியாக வந்த பைக் மோதியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து பைக்கில் வந்த 4 பேர் தன்னிடம் வம்புக்கு இழுத்தாக மதுரவாயல் காவல் நிலையத்தில் சுபாஷ் புகார் அளித்தார். அப்போது தான் ஐஏஎஸ் அலுவலர் எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக 4 பேரை பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்து வழக்குப்பதிவு செய்து பின்னர் பிணையில் விடுவித்தனர்.
இந்த நிலையில் புகார் தெரிவித்த சுபாஷ் கொடுத்த விசிட்டிங் கார்டை பார்த்த காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அந்த விசிட்டிங் கார்டில் ஊரக வளர்ச்சி துறை இணை செயலாளர் என்று போடப்பட்டிருந்தது.