தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

தேசிய திறனாய்வுத்தேர்வு - விண்ணப்பிக்க காலநீட்டிப்பு - www.dge.tn.gov.in

10ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வுத்தேர்வு விண்ணப்பிக்க காலநீடிப்பு
தேசிய திறனாய்வுத்தேர்வு விண்ணப்பிக்க காலநீடிப்பு

By

Published : Nov 10, 2021, 8:12 PM IST

சென்னை:10ஆம் வகுப்பு மாணவர்கள் கல்வி உதவித் தொகை பெறுவதற்கான தேசிய திறனாய்வுத் தேர்விற்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், '2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு தேசிய திறனாய்வுத் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் நவம்பர் 8ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத்தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

தற்பொழுது விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்யும் தேதி நவம்பர் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:நீட் தேர்வுக்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - இந்திய மாணவர் சங்கம் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details