தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலநிலை மாற்றத்திற்கான வரைவு செயல்திட்டம் குறித்து கருத்து தெரிவிக்க கால அவசாகம் நீட்டிப்பு

சென்னையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான, வரைவு செயல்திட்டம் தயாரிக்க பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க மேலும் ஒருகால மாதம் காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By

Published : Sep 26, 2022, 10:26 PM IST

சென்னை:இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஐந்தாவது பெருநகரமாக சென்னை மாநகராட்சி உள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் விரைவான நகரமயமாக்கலுக்கு ஏற்ப இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையிலும், பல்வேறு சவால்களை சமாளிக்கும் வகையிலும் காலநிலைக்கான செயல்திட்டத்தை தயாரிக்க C40 நகரங்களுக்கான கூட்டமைப்பில் இணைந்துள்ளது.

C40 நகரங்களுக்கான கூட்டமைப்பின் சார்பில் சென்னையில் காலநிலை செயல்திட்டத்தை தயாரிக்க பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, வரைவு செயல் திட்டம் (Draft Action Plan) குறித்த பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வரைவு செயல் திட்டப் பரிந்துரைகள் மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை chennaiclimateactionplan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் இன்று உடன் தெரிவிக்கும்படி வரைவு செயல்திட்டப் பரிந்துரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் தமிழில் பதிவு செய்யாததால், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் தமிழில் வரைவு திட்டத்தை வெளியிட வேண்டும் மேலும் கால அவகாசம் தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இதன் எதிரொலியாக, இந்த வரைவு செயல்திட்டப் பரிந்துரைகளின் தமிழ்ப்பதிவு இணையதளத்தில் நாளை மாநகராட்சி வெளியிட உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை வரும் அக்.26 தேதி வரை தெரிவிக்கும் வகையில் ஒருமாத காலத்திற்கு மாநகராட்சி காலநீட்டிப்பு செய்துள்ளது.

இதையும் படிங்க: மாவட்ட அளவில் காலநிலை மாற்ற இயக்கம் - ரூ.3.80 கோடி நிதி ஒதுக்கீடு

ABOUT THE AUTHOR

...view details