தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலுக்கான தடை தொடரும் - நீதிமன்றம் - court news tamil

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்து பிறப்பித்த உத்தரவை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

puduchery election
puduchery election

By

Published : Oct 21, 2021, 5:42 PM IST

சென்னை:புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின வகுப்பினருக்கு உரிய வகையில் சுழற்சி முறை இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு, தேர்தல் அறிவிப்பை திரும்பப் பெற மாநில தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி அளித்தவுடன் 5 நாட்களில் புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அக்டோபர் 5ஆம் தேதி உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி, உள்ளாட்சி தேர்தலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 33.5 விழுக்காடும், பழங்குடியினருக்கு 0.5 விழுக்காடும் ஒதுக்கீடு வழங்கி 2019ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணையை புதுச்சேரி அரசு திரும்ப பெற்றது.

இந்த நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி பிறப்பித்த புதிய தேர்தல் அரசாணையை எதிர்த்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவரும், திமுக அமைப்புச் செயலாளருமான சிவா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த வழக்கில், பிற்படுத்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த அரசாணை அரசியல் சாசனத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் இருப்பதாகக் கூறியுள்ளார்.

மத்தியில் உள்ள ஆளுங்கட்சிக்கு சாதகமாக இடஒதுக்கீடு அறிவிப்பாணை திரும்பப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அப்துல் குத்தூஸ் அமர்வு, அரசியல் சட்ட விதிகளை பின்பற்றவில்லை எனக் கூறி, தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்துவைக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது புதுச்சேரி அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜயநாரயண், புதுச்சேரியில் பழங்குடியினர் யாரும் இல்லை என்றும், இது தொடர்பான விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உள்ளதாக குறிப்பிட்டார். இதையடுத்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதையும் படிங்க:தீபாவளிக்கு பின்... தமிழ்நாடு முழுக்க சசிகலா சூறாவளி சுற்றுப்பயணம்!

ABOUT THE AUTHOR

...view details