இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் விமானம், ரயில், பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் சரக்கு விமானங்கள் தொடர்ந்து இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதனால் வெளிநாடுகளிலிருந்து மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் வந்தன.
இந்நிலையில் சென்னை மீனம்பாக்கம் சரக்கு வெளிநாட்டு தபால் பிரிவு முனையத்திலிருந்து பிரிட்டன் நாட்டிற்கு ஏற்றுமதிக்காக 101 தபால்கள் வந்திருந்தன. இந்தத் தபால்களில் தமிழ்நாட்டின் மூலிகை சார்ந்த உணவு மற்றும் மருந்து வகைகள் இருந்தன.