கடந்த 2017 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பொருட்களை கொண்டு சென்றது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும், திமுகவிலிருந்து நீக்கபட்ட கு.க.செல்வத்திற்கும் விளக்கம் கேட்டு பேரவை உரிமைக்குழு இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பியது.
அந்த நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவை உறுப்பினர்ககள் தொடர்ந்த வழக்கை விசாரிக்க முடியாது என பரிந்துரைக்கப்பட்டது. பின்னர் அந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நோட்டீசுக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், வழக்கு குறித்து பேரவைத் தலைவர், செயலாளர், உரிமைக்குழு மற்றும் அதன் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 28 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.