தமிழ்நாடு

tamil nadu

சென்னை ஐஐடியில் தொழில்நுட்ப கண்காட்சி மற்றும் கருத்தரங்கு!

By

Published : Dec 31, 2019, 6:31 PM IST

சென்னை: மாணவர்களின் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஜனவரி 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை நடைபெறுமென ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.

iit
iit

இதுதொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவர்கள் நடத்தக்கூடிய தொழில்நுட்பக் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சிகள் வரும் 3ஆம் தேதி முதல் 6ஆம் தேதிவரை நடைபெறுகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் இதனை பார்ப்பதற்கு இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள்.

இந்தியப் பாதுகாப்புத் துறையின் கண்டுபிடிப்புகள், மாணவர்களின் பல்வேறு கண்டுபிடிப்புகள் இங்கே காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன. கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோருக்கான சக்கர நாற்காலி, பார்வையற்றோருக்கான ஊன்றுகோல், முதியோருக்கான ஊன்றுகோல் ஆகியவற்றை கண்டுபிடிப்பது குறித்த ஹாக்கத்தான் போட்டியும் நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தேசிய அளவிலான மாணவர்கள் உட்பட தொழிற்கல்வி பயிலக்கூடிய சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது “ என்றார்.

ஐஐடியில் கண்டுபிடிப்புகள் குறித்த ஹாக்கத்தான் போட்டி - ஐஐடி இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி

இதையும் படிங்க: அரசுப் பேருந்தை யானை கூட்டம் வழிமறிப்பு!

ABOUT THE AUTHOR

...view details