தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 13, 2021, 10:05 AM IST

Updated : Sep 13, 2021, 10:53 AM IST

ETV Bharat / city

நீட் தேர்வு விலக்கு: சட்டப்பேரவையில் இன்று புதிய மசோதா

தமிழ்நாட்டிற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார்.

நீட் தேர்வு விலக்கு
நீட் தேர்வு விலக்கு

சென்னை:நீட் தேர்வு அச்சத்தால் சேலம் மாணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில், அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா சட்டப்பேரவையில், நிறைவேற்றப்படும் என அறிவிக்கை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு நடக்கவிருப்பது முதலமைச்சரின் மனதுக்கு விரும்பமில்லாத நிகழ்வாக இருக்கிறது. சட்டப்பேரவை கூட்டத்தொடரின் இறுதி நாளன்று, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்பட்டு, குடியரசுத் தலைவருக்கு அழுத்தம் கொடுத்து நீட் தேர்விலிருந்து விலக்கு பெற்றுத் தரப்படும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.

நீட் தேர்வு விலக்கு

இந்நிலையில், நீட் தேர்வின் அச்சத்தால் தொடர்ந்து மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு வரும் நிலையில், இந்த நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் வகையில் புதிய சட்ட மசோதாவை இன்று (செப்.13) முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யவுள்ளார்.

இதையும் படிங்க: நீட் மரணம் - தற்கொலை செய்துகொண்ட மாணவர் குடும்பத்திற்கு நிதியளித்த உதயநிதி

Last Updated : Sep 13, 2021, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details