சென்னை:அரசு தேர்வுத்துறை இயக்ககம் தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை தனித்தேர்வர்களாக எழுத உள்ளவர்களுக்கான செய்முறைத்தேர்வு ஏப்.27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது.
10ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு அறிவிப்பு - அரசு தேர்வுத்துறை
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை தனித்தேர்வர்களாக எழுத உள்ளவர்களுக்கான செய்முறை தேர்வு ஏப்.27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே மாதம் நடைபெற உள்ள பொதுத்தேர்வை எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கான அறிவியல் செய்முறை தேர்வு ஏப்.27ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெறும்.
செய்முறை தேர்விற்கு அவர்கள் பயிற்சிபெற்ற பள்ளியிலேயே எழுதலாம். மேலும், பத்தாம் வகுப்பிற்கு நேரடியாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள், ஏற்கெனவே அறிவியல் பாடத்திற்கான செய்முறைத்தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் இந்த தேர்வினை எழுத வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பொதுத் தேர்வுக்குத் தயராகும் தேர்வுத் துறை