தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், சசிகலா'... மூவரும் இணைந்த வலிமையான அதிமுக தேவை!

அதிமுக ஒன்றுபட்டு செயல்படாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும் என கே.சி. பழனிசாமி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

ex mp kc palanisamy about admk election process
ex mp kc palanisamy about admk election process

By

Published : Feb 1, 2021, 7:00 AM IST

சென்னை: நுங்கம்பாக்கத்தில் சசிகலா விடுதலை குறித்து அதிமுகவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, 'அடிப்படை தொண்டர்களால் மட்டுமே அதிமுகவின் பொதுச்செயலாளர் பதவியைத் தேர்ந்தெடுக்க முடியும். இது உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு. ஆகையால், தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளரே கட்சிக்குத் தலைமை வகிக்க வேண்டும்’ என்றார்.

டிடிவி மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் அதிமுகவில் இணைப்பதற்குப் பரிசீலிப்போம் என்று கே.பி.முனுசாமி தெரிவித்த கூற்றுக்குப் பதிலளித்த அவர், 'தேர்தலில் வெற்றி பெறாத கே.பி. முனுசாமி கூறும் கருத்தை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

தலைமை குறித்து ஒருவருக்கொருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டுவது கட்சியின் பலவீனமாகும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படை தொண்டர்கள் எதிர்பார்ப்பது ஒன்றுபட்ட அதிமுக. இதில் தலைமையை முடிவெடுப்பது தொண்டர்களே.

திமுக வரும் தேர்தலில் வலிமையுடன் ஆட்சியைப் பிடிப்பதற்கான வழியை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவில் உள்ள தலைவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்ட கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இம்மாதிரியான கருத்துகள் கட்சியைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தும். இடைக்கால ஏற்பாடாகக் கட்சியின் வழிகாட்டுதல் குழுவிற்குத் தலைவராக சசிகலாவை நியமிக்க வேண்டும்.

அதிமுக ஒன்றுபட்டுச் செயல்படாவிட்டால், சட்டப்பேரவைத் தேர்தலில் டெபாசிட் இழக்கும். காவல் துறையும், ஆட்சியும், அதிகாரமும், இன்னும் 60 நாட்கள் மட்டுமே எடப்பாடி பழனிசாமியிடம் இருக்கும். மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமென்றால், ஒன்றுபட்ட அதிமுக தேவை. தேர்தலை எதிர்கொள்வதற்கு அதிமுக தன்னை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.

அதிமுக கொடியைப் பயன்படுத்துவதற்கு ஒரு ஒரு, தொண்டனுக்கும் உரிமையுள்ள நிலையில் சசிகலா பயன்படுத்துவதற்கும் உரிமை உள்ளது. எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மூவரும் இணைந்த வலிமையான அதிமுக தேவை. கட்சியில் உள்ள தலைவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்துப் போக வேண்டும். அனைவரும் ஒன்றுபட்டுச் செயல்பட முதலமைச்சர் தான் முடிவு எடுக்க வேண்டும்’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details