தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் (ராகுல்) என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்'

தமிழினத்தைக் கொன்றுவிட்டு தமிழன் என்று கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ராகுல் காந்தி பேச்சு குறித்து விமர்சனம் செய்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

By

Published : Feb 3, 2022, 12:16 PM IST

Updated : Feb 3, 2022, 1:56 PM IST

சென்னை: மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி. முனுசாமி, வைத்தியலிங்கம், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, உதயகுமார் உள்ளிட்ட பல்வேறு அதிமுக நிர்வாகிகள் மலர்த்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய ஜெயக்குமார், ”திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு மக்கள் எதிர்பார்த்த வாக்குறுதிகள் ஒன்றைக்கூட நிறைவேற்றவில்லை. தேர்தல் காலத்தில், தமிழ் ஈழம், சமூக நீதி என்ற யுக்தியைக் கையில் எடுக்கின்றனர்.

அதைப் பற்றி பேச திமுகவிற்குத் தகுதியில்லை, அருகதையில்லை. சமூக நீதிக்கு ஆபத்தில்லாமல் அதிமுக பாதுகாத்து வைத்திருக்கிறது. பாதி அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. விரைவில் கம்பி எண்ணும் நாள் நிச்சயம் வரும்" என்றார்.

மத்திய பாஜக அரசை ராகுல் விமர்சித்தது தொடர்பான கேள்விக்கு, அதைப்பற்றி பாஜகவிடம்தான் கேட்க வேண்டும் என்றார்.

மேலும், ராகுல் காந்தி தான் தமிழன் என்று சொன்னது குறித்த கேள்விக்கு ஜெயக்குமார், தமிழினத்தை கொன்றுவிட்டு தமிழன் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என விமர்சனம்செய்தார்.

இதையும் படிங்க: 'வளர்ந்துவரும் பாரதிய ஜனதா; அச்சத்தில் முதலமைச்சர்!'

Last Updated : Feb 3, 2022, 1:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details