தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

வெள்ளை அறிக்கை- சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன்- ஓபிஎஸ் அதிரடி - chennai news in tamil

தமிழ்நாடு நிதியமைச்சர் இன்று வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ள நிலையில், வெள்ள அறிக்கை குறித்து சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் என எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

ex-finance-minister-o-penner-selvam-opinion-on-white-statement
வெள்ளை அறிக்கை குறித்து சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் ஓபிஎஸ்

By

Published : Aug 9, 2021, 9:29 PM IST

சென்னை:தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், வெள்ளை அறிக்கையை இன்று வெளியிட்டார்.

அதிமுக அரசால் தமிழ்நாடு அரசுக்கு ரூ.2,577 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், ஒவ்வொரு குடும்பத்தினர் மீதும் ரூ.2.63 லட்சம் கடன் இருப்பதாகவும் அந்த வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில், மதுரையில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த தமிழ்நாடு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ. பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் இதுதொடர்பான கேள்விகளை எழுப்பினர்.

அப்போது, வெள்ளை அறிக்கை குறித்து சொல்ல வேண்டிய இடத்தில் சொல்வேன் எனக் கூறிக்கொண்டே புறப்பட்டார்.

இதையும் படிங்க:ஒரு அரசு பேருந்து ஒரு கிமீ ஓடினால் ரூ.60 இழப்பு!

ABOUT THE AUTHOR

...view details