தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

'கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்!' - EX CM Karunanidhi should be given Bharat Ratna award

சென்னை: கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என இனிகோ இருதயராஜ் கோரிக்கைவைத்துள்ளார்.

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்
கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

By

Published : Jun 23, 2021, 12:22 PM IST

சென்னை கலைவாணர் அரங்கத்தில் மூன்றாவது நாளாக ஆளுநர் உரை மீதான இரண்டாவது நாள் விவாதம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. இதில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதய ராஜ் கன்னிப்பேச்சை நிகழ்த்தினார்.

அப்போது அவர், "சிறுபான்மையினர் நலன் காக்க செயல்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க இந்தப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனச் சிறுபான்மை சமூக மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்" எனப் பேசினார்.

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்

2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திருச்சி சிவா எம்பி மாநிலங்களவையில், கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்திருந்தது நினைவுகூரத்தக்கது.

இதையும் படிங்க: ஒன்றிய அரசு என சொல்வதை சமூக குற்றம் என கருதவேண்டாம் - முதலமைச்சர் ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details