தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

உண்மையான திராவிடன் செல்லவேண்டியது கமலாலயம் அல்ல, அறிவாலயம் - அதிமுக முன்னாள் எம்.பி., - திமுகவில் இணைந்த விஜிலா சத்யானந்த்

உண்மையான திராவிடன் செல்லவேண்டியது திமுகவின் அறிவாலயத்திற்குத் தானே அன்றி, பாஜக அலுவலகமான கமலாலயத்திற்கு அல்ல என திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி., விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார்.

விஜிலா சத்யானந்த் திமுகவில் இணைந்தார்
விஜிலா சத்யானந்த் திமுகவில் இணைந்தார்

By

Published : Jul 9, 2021, 7:22 AM IST

சென்னை: அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் விஜிலா சத்யானந்த் நேற்று (ஜூலை 8) திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த விஜிலா சத்யானந்த், "பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் ஸ்டாலின் தலைமையிலான திமுகவில் இணைந்திருக்கிறேன். முதற்கட்ட அளவிலேயே முதலமைச்சரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது.

குறிப்பாக, பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணம், 10 மாவட்ட ஆட்சித்தலைவர்களில் பெண்கள் நியமனம் என பெண்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது எனக்குப் பிடித்து இருந்தது.

ஜெயலலிதாவிற்குப் பின் அதிமுக

உண்மையான திராவிடன் செல்லவேண்டியது கமலாலயம் அல்ல, அறிவாலயம். திமுக தொண்டனாக நான் பணியாற்ற விரும்புகிறேன். அதிமுகவில் ஜெயலலிதா உயிரோடு இருந்தபொழுது முதல் வரிசையில் அமர வைக்கப்பட்ட மகளிரணியினர், இப்போது ஒதுக்கப்பட்ட ஒரு நிலையில்தான் உள்ளனர்.

அதிமுகவில் மகளிருக்குப் பலனில்லை

அதிமுகவில் சட்டப்பேரவை உறுப்பினர்களை திருப்திப்படுத்த மட்டுமே கட்சித் தலைமை கடந்த காலங்களில் செயல்பட்டு வந்தது. தற்போது, அக்கட்சியில் மாவட்ட செயலாளர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. கட்சிக்காக உழைக்கும் மகளிருக்கு அதிமுகவில் எந்தவிதப் பலனும் இல்லை" என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்

ABOUT THE AUTHOR

...view details