தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தாெகுப்புகள் #EtvBharatNewsToday - இன்று ஓணம்

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

NEWS TODAY
NEWS TODAY

By

Published : Aug 31, 2020, 7:20 AM IST

  • வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு தண்டனை அறிவிக்கப்படுகிறது!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு இன்று(ஆக.31) உச்ச நீதிமன்றம் தண்டனை அறிவிக்க இருக்கிறது.

பிரசாந்த் பூஷண்
  • வைகை அணையில் இன்றிலிருந்து 120 நாட்களுக்கு தண்ணீர் திறப்பு!

தேனி வைகை அணையில் இன்றிலிருந்து(ஆக.31) 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

வைகை அணை
  • ஓணம் பண்டிகையை முன்னிட்டு மூன்று மாவட்டங்களுக்கு விடுமுறை! மலையாள மொழி பேசும் மக்கள் கொண்டாடும் திருவோணம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓணம் பண்டிகை
  • வங்கிக் கடன் தவணை கால அவகாசம் முடிவு!

கரோனா வைரஸால் ஊரடங்கு காரணமாக ரிசர்வ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, கடன் தவணையை செலுத்தும் கால அவகாசத்தை 6 மாதங்கள் நீட்டித்தது. அந்தக் கால அவகாசம் இன்றுடன் (ஆக.31) முடிவடைகிறது.

ரிசர்வ் வங்கி
  • புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்க இன்று கடைசி நாள்!

புதிய கல்விக்கொள்கை குறித்து ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. அதன் கால அவகாசம் இன்றுடன்(ஆக.31) முடிவடைகிறது.

புதிய கல்விக்கொள்கை

ABOUT THE AUTHOR

...view details