தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பு #EtvBharatNewsToday - Today News

இன்றைய செய்திகள் மற்றும் நிகழ்வுகளின் தொகுப்பை இங்கு காணலாம்.

இன்றைய நிகழ்வுகள் இன்றைய செய்திகள் NewsToday Today News On This Day
இன்றைய நிகழ்வுகள் இன்றைய செய்திகள் NewsToday Today News On This Day

By

Published : Jul 10, 2020, 7:08 AM IST

  • ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டம் தொடக்கம்
    பிரதமர் நரேந்திர மோடி

மத்தியப் பிரதேச மாநிலத்தின் ரேவா மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆசியாவின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை10) நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

  • மருத்துவ முகாம்
    கரோனா பரிசோதனை (கோப்பு படம்)

சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாநகராட்சி சார்பில் 15 மண்டலங்களிலும் 521 மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது.

  • ராஜ்நாத் சிங் பிறந்தநாள்
    ராஜ்நாத் சிங்

உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், நாட்டின் தற்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத் சிங்குக்கு இன்று 69ஆவது பிறந்தநாள்.

  • ரஷ்ய செய்தி நிறுவனம் தொடக்கம்
    ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் டாஸ்

ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான டாஸ் 1925ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இதே தினத்தில் நிறுவப்பட்டது.

  • வண்ணப் படங்கள் திரையிடல்
    ஜார்ஜ் ஈஸ்டர்மென்

1928ஆம் ஆண்டு ஜார்ஜ் ஈஸ்டர்மென் முதன் முதலாக வண்ண திரைப்படங்களை காட்சிப்படுத்தினார்.

  • சுனில் கவாஸ்கர் பிறந்தநாள்
    சுனில் கவாஸ்கர்

இந்தியாவின் முன்னாள் நட்சத்திர கிரிக்கெட் வீரர், 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர், கிரிக்கெட் வர்ணனையாளர் என பன்முகம் கொண்ட ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் இன்று தனது 71ஆவது பிறந்தநாளில் அடியெடுத்துவைக்கிறார்.

  • டென்னிஸ் சாம்பியன் ஆர்தர் ஆஷே பிறந்தநாள்
    ஆர்தர் ஆஷே

சர்வதேச டென்னிஸ் ஹால் ஆஃப் ஃபேமில் நுழைந்த முதல் ஆப்பிரிக்க-அமெரிக்கரான ஆர்தர் ஆஷே 1943ஆம் ஆண்டு இதே தினத்தில் பிறந்தார். அவர் 33 தொழில்முறை பட்டங்களை வென்றுள்ளார். டென்னிஸின் ஒற்றையர் பிரிவிலும் மூன்று பட்டங்களை தனதாக்கியுள்ளார்.

  • தாய்லாந்துக்கு 700 மில்லியன் டாலர் கடன்
    உலக வங்கி கட்டடம்

1998ஆம் ஆண்டு உலக வங்கி தாய்லாந்துக்கு 700 மில்லியன் டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளித்தது.

  • கோட்டா சீனிவாச ராவ் பிறந்தநாள்
    கோட்டா சீனிவாச ராவ்

பிரபல வில்லன் நடிகரும், அரசியல்வாதியுமான கோட்டா சீனிவாச ராவ் இன்று தனது 73ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர், சிறந்த வில்லன் நடிகர், பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இதையும் படிங்க: ராணுவத்தை முழுவதுமாக திரும்பப் பெற்ற சீனா?

ABOUT THE AUTHOR

...view details