தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம் Top 10 news @1PM - chennai district

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.
ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

By

Published : Oct 16, 2021, 1:40 PM IST

1.அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு - சசிகலா!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அவரது தோழி வி.கே. சசிகலா, 'அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு' எனத் தெரிவித்தார்.

2.நான் இன்னும் விட்டுப்போகவில்லையே - அடுத்த சீசன் குறித்து தோனி சூசகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு என உருவாக்கிய ஒரு தனிப் பாரம்பரியத்தை விட்டுச்செல்வது குறித்து நீங்கள் பெருமைப்படலாம் என்று நிகழ்ச்சி வர்ணனையாளர் கூறியதற்கு, நான் இன்னும் அணியை விட்டுப்போகவில்லையே எனக் கேப்டன் தோனி புன்னகையுடன் தெரிவித்துள்ளார்.

3.ஜெயலலிதா சமாதியில் கண்ணீர் துளிகளுடன் சசிகலா மரியாதை

நாளை (அக். 17) அஇஅதிமுக தோன்றி 50ஆவது பொன்விழா ஆண்டில் காலடி எடுத்துவைக்கிறது. இதனையொட்டி மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சமாதியில் அவரது தோழியான சசிகலா கண்ணீர் மல்க மரியாதை செலுத்தினார்.

4.பெங்களூரு சிறையிலிருந்து விடுதலையானார் சுதாகரன்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவடைந்த நிலையில், சுதாகரன் இன்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையிலிருந்து விடுதலையானார்.

5.CSK vs DMK - வெற்றியை ஒப்பிட்டு சிலாகித்த சேகர்பாபு

ஐபிஎல் 2021 தொடரின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற சென்னை அணிக்கு வாழ்த்துத் தெரிவித்தோடு, இந்த வெற்றியை முதலமைச்சர் ஸ்டாலினின் வெற்றியோடு ஒப்பிட்டு அமைச்சர் சேகர் பாபு ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

6.'சசிகலா அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது'

சசிகலா அரசியலுக்கு வந்தால் அதை நாம் விமர்சிக்க முடியாது. சசிகலா விரும்பும் நேரத்தில் அரசியலுக்கு வருவதை நாம் நிராகரிக்க முடியாது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கருத்துத் தெரிவித்துள்ளார்.

7.சபரிமலை கோயில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஐப்பசி மாத பூஜைக்காக இன்று (அக்டோபர் 16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

8.நெல்லை அருகே பிரபல ஜவுளி கடை உரிமையாளர் கைது

ஆலங்குளம் அருகே மகராஜன் ஜவுளி ஸ்டோர் என்ற கடையில், பிரபல ஜவுளி நிறுவனங்களின் முத்திரைகளைப் போலியாகப் பயன்படுத்தி வியாபாரம் செய்த உரிமையாளர்களைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

9.'ஆர்டிக்கிள் 15' ரீமேக்: உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் வெளியீடு

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தின் 'நெஞ்சுக்கு நீதி' மோஷன் போஸ்டர் தற்போது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியாகியுள்ளது.

10.டாக்டர் படம் பார்க்கச் சென்றபோது விபரீதம்: 2 வயது குழந்தை உயிரிழப்பு!

சென்னையில் தந்தை கண் எதிரே இரண்டு வயது ஆண் குழந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details