தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - புதுச்சேரியில் 144 தடை உத்தரவு

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை சுருக்கமாக இங்கு காணலாம்.

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday
இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

By

Published : Mar 30, 2021, 5:13 AM IST

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

தேர்தல் பரப்புரைக்காக, பிரதமர் மோடி புதுச்சேரி வருவதை ஓட்டி அம்மாநிலத்தில் இன்று மட்டும் 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தமிழ்நாடு வருகிறார். தாராபுரம் தொகுதியில் தமிழ்நாடு பாஜக தலைவர் எல்.முருகனுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்கிறார்.

பிரதமர் மோடி தமிழ்நாடு வருகை

குடியரசு தலைவருக்கு இருதய அறுவை சிகிச்சை

நெஞ்சுவலி காரணமாக டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இன்று இருதய அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர்.

குடியரசு தலைவருக்கு இருதய அறுவை சிகிச்சை

கேரளா செல்லும் பிரியங்கா காந்தி

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேரளாவில் இன்றும் நாளையும் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

கேரளா செல்லும் பிரியங்கா காந்தி

ஜெய்சங்கரின் தஜிகிஸ்தான் பயணம்

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தஜிகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் சிரோஜிதீன் முஹ்ரிடினின் அழைப்பின் பேரில், இன்றும் நாளையும் தஜிகிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜெய்சங்கரின் தஜிகிஸ்தான் பயணம்

அவுரங்காரபாத்தில் முழு ஊரடங்கு அமல்

கரோனாவின் இரண்டாவது அலை காரணமாக மகராஷ்ட்ரா மாநிலத்தில் தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் அம்மாநிலத்தின் அவுரங்கபாத் மாவட்டத்திற்கு மட்டும் இன்று முதல் ஏப்ரல் 8 வரை முழு ஊரடங்கு விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அவுரங்காரபாத்தில் முழு ஊரடங்கு அமல்

ABOUT THE AUTHOR

...view details