தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @9pm - etv bharat top10 news

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...
ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

By

Published : May 20, 2020, 8:45 PM IST

கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் நடனமாடிய பெண்கள் - சர்ச்சையான வீடியோ

பாட்னா: பொழுதுபோக்கிற்காக கரோனா தனிமைப்படுத்தல் மையத்தில் பெண்களை நடனமாட வைத்த காணொலி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பசியோடு இருக்கும் இந்தியர்களுக்கு உணவு வழங்க அமெரிக்க நிறுவனம் நிதி உதவி!

இந்தியாவில் கரோனா ஊரடங்கு காரணமாக, பசியால் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு உதவ அமெரிக்க நிறுவனமான யு.எஸ். கேபிடல் குளோபல் நிறுவனம், பிரஜ் பூமி குழுமத்தின் மூலம் உணவு அளிக்க நிதி உதவி வழங்கியுள்ளது.

இந்தியாவில் மீண்டும் தொடங்குகிறது விமான சேவை

டெல்லி: கரோனா லாக்டவுன் காரணமாக முடக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமான சேவை வரும் 25ஆம் தேதியிலிருந்து தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல வருடங்களுக்கு பின் மன்மதராசா பாடலுக்கு நடனமாடிய சாயா சிங்

நடிகை சாயா சிங், நடன மாஸ்டர் சிவசங்கருடன் 'மன்மதராசா' பாடலுக்கு நடனமாடிய வீடியோவை பதிவிட்டு ரசிகர்களுக்கு பிறந்தநாள் ட்ரீட் கொடுத்துள்ளார்.

மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலக்கும் அவலம்: முதலமைச்சரிடம் மனு கொடுத்தும் தீராத பிரச்னை!

மதுரை: மழைநீர் வடிகாலில் கழிவு நீர் கலப்பதைத் தடுக்க முதலமைச்சர் உட்பட பலரிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

சுகாதாரப் பணியாளர்களுக்கு பேட்டரி வண்டி அறிமுகம்

ஈரோடு: கரோனா தடுப்பு நடவடிக்கையாக சுகாதாரப் பணியாளர்களின் நலன்கருதி தமிழ்நாடு அரசு எளிதாக இயக்கும் ஹைட்ராலிக் பேட்டரி வண்டியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பால் பாக்கெட் திருடிய பாய்ஸ்: சிசிடிவி மூலம் சிக்கினர்!

சென்னை: பால் ஏஜென்சி கடை முன்பு வைக்கப்பட்டிருந்த பால் பாக்கெட்டுகளை திருடிச் சென்றவர்கள், சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கிக்கொண்டனர்.

முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!

கன்னியாகுமரி: முடித்திருத்தும் தொழிலாளர்களுக்கு 22 கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே உத்தரவிட்டுள்ளார்.

‘வணக்கண்டா மாப்ள, சேலத்துல இருந்து’ - அதிகாரப்பூர்வ கீதத்தை வெளியிட்ட சேலம் ஸ்பார்டன்ஸ்!

தமிழ்நாடு பிரீமியர் லீக் டி20 தொடரின் அணிகளின் ஒன்றான சேலம் ஸ்பார்டன்ஸ் அணி, தனது அதிகாரப்பூர்வ கீதம்/ தீம் பாடலை (official anthem/theme song) வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்துள்ளது.

39 நகரங்களில் தனது பைக் டாக்ஸி சேவையைத் தொடங்கிய ராபிடோ!

பச்சை, ஆரஞ்சு மண்டலங்களில் தனது சேவையைத் தொடங்கவுள்ளதாக பிரபல பைக் டாக்ஸி நிறுவனமான ராபிடோ தெரிவித்துள்ளது. எனினும் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களில் சேவையை தொடங்கப்போவதில்லை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details