தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS @ 7 AM - etv bharat top ten news

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news seven am
etv bharat top ten news seven am

By

Published : Aug 16, 2021, 7:15 AM IST

தமிழ்நாட்டிலேயே பழங்குடியினருக்கு முதல் அங்காடி

தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக திருநெல்வேலியில், காணி பழங்குடியினருக்கு வாழ்வியல் அங்காடியை மாவட்ட ஆட்சியர் அமைத்து கொடுத்துள்ளார்.

சென்னை துறைமுகம் - மதுரவாயல் மேம்பால பணிக்கு விரைவில் ஒப்பந்தம்

சென்னை துறைமுகம்-மதுரவாயல் இடையிலான 2 அடுக்கு மேம்பால திட்டத்திற்கான ஒப்பந்தத்தை தேசிய நெடுஞ்சாலைத் துறை விரைவாக கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசியக்கொடி ஏற்றிய தூய்மைப் பணியாளர்கள்: ஆசிரியருக்குப் பாராட்டுகள்

வேலூரில் 75ஆவது சுதந்திர தின விழாவில் தூய்மைப் பணியாளர்கள் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி துறைமுக ஏற்றுமதி-இறக்குமதியில் வளர்ச்சி: துறைமுக தலைவர்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகம் கடந்த ஆண்டை விட சரக்கு ஏற்றுமதி-இறக்குமதியில் 7.14 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது என துறைமுகத் தலைவர் டி.கே. ராமச்சந்திரன் கூறினார்.

தமிழ்நாட்டின் கடன் ரூ. 9 லட்சம் கோடி - ஹெச். ராஜா

தமிழ்நாட்டின் கடனாக ரூ. 9 லட்சம் கோடி உள்ளது என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜா கூறினார்.

இன்றைய ராசி பலன்கள் - ஆகஸ்ட் 16

நேயர்களே மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைக் காண்போம்.

'அதிமுகவின் 3ஆவது தலைமுறையே' - சசிகலா ஆதரவு சுவரொட்டிகளால் பரபரப்பு

ஆகஸ்ட் 18இல் பிறந்தநாள் காணும் சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகளால் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை கொண்டாடிய தெலங்கானா தமிழ்ச் சங்கம்

தெலங்கானா தமிழ்ச் சங்கம் சார்பில் 75ஆவது சுதந்திர தின விழா இன்று (ஆகஸ்ட் 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

19 வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலை வேங்கை குதிராம் போஸ்

தனது 19ஆம் வயதில் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸின் தியாக வரலாறு குறித்த செய்தித் தொகுப்பு.

TNPL 2021: சென்னை அணி சாம்பியன்

டிஎன்பிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில், சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details