தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மதியம் 1 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 1 PM

ஈடிவி பாரத்தின் மதியம் 1 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Aug 13, 2021, 12:49 PM IST

தமிழ்நாடு பட்ஜெட் : எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டுக்கு ரூ. 3 கோடி

சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி மூன்று கோடி மீண்டும் அளிக்கப்படும் என பட்ஜெட் தாக்கலில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு

தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், காவல்துறைக்கு ரூ.8,930 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு பட்ஜெட் உரை: மீண்டும் வழங்கப்பட உள்ள ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’!

சென்னை: இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 3ஆம் தேதி கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாளன்று ’கலைஞர் செம்மொழித் தமிழ் விருது’ வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

’பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நிவாரணம் வழங்குவது ஒன்றிய அரசின் கடமை’ - பிடிஆர்

பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையிலிருந்து அதிமுகவினர் வெளிநடப்பு'

தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

நாமக்கல் எஸ்பி அலுவலகத்தில் பாதுகாப்பு கோரி காதல் ஜோடி தஞ்சம்!

காதலித்து திருமணம் செய்துகொண்ட இருவர் நாமக்கல் எஸ்பி அலுவலத்தில் பாதுகாப்பு கோரி புகார் மனு அளித்துள்ளனர்.

புதுச்சேரி சாலையோரக் கடை வியாபாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் அடியில் படுத்து மறியல்!

புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தின் அடியில் படுத்து வியாபாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட டெல்லி சிறுமி: மீதமிருந்த உடல் பாகங்களை தகனம் செய்த பெற்றோர்

டெல்லி நங்கல் பகுதியில் சிறுமி ஒருவர் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, எரியூட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது உடலின் கைப்பற்றப்பட்ட மீதி பாகங்களை அவரது உறவினர்கள் தகனம் செய்தனர்.

வரதட்சணைக்கு எதிரான நடவடிக்கை: கேரள ஆளுநர் அதிரடி!

நகை விளம்பரங்களில் மணமகள் திருமணக் கோலத்தில் இருப்பது போன்ற விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டும் என நகைக்கடை உரிமையாளர்களுக்கு கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் அறிவுறுத்தியுள்ளார்.

'ஓடு ஓடு ஆடு' - புஷ்பா ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

'புஷ்பா' படத்தின் முதல் சிங்கிளான 'ஓடு ஓடு ஆடு' பாடல் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details