தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

நண்பகல் 1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1Pm

ஈடிவி பாரத்தின் நண்பகல் ஒரு மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top ten news one pm
etv bharat top ten news one pm

By

Published : Aug 2, 2021, 1:00 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையும், சீர்திருத்தச் சட்டங்களும் - ஓர் பார்வை

தமிழ்நாடு சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா இன்று (ஆக 2) கொண்டாடப்பட உள்ள நிலையில், நாட்டின் வேறு எந்த மாநிலங்களிலும் இயற்றப்படாத சமூக சீர்திருத்தத்தச் சட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது நினைவுகூரத்தக்கது.

2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல்

சென்னை மருத்துவரிடம் நூதன முறையில் வங்கிக் கணக்கிலிருந்து 2.4 லட்சம் ரூபாய் திருடிய சைபர் மோசடி கும்பல் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நகை வாங்குபவர்களுக்கு நற்செய்தி... இறங்குமுகத்தில் தங்கம், வெள்ளி விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 36,376 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

’சித்த மருத்துவத்தால் குணமாகும் கரோனா’ - சர்வதேச ஆய்விதழில் வெளியான முதல் ஆய்வு

கரோனா சிகிச்சையின்போது பயன்படுத்தப்படும் சித்த மருந்துகளின் செயல்திறன், பாதுகாப்பு குறித்து வேலூர் மாவட்ட சித்த மருத்துவக் குழுவினர் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் சர்வதேச ஆய்வு இதழில் பிரசுரமாகியுள்ளது.

புகழ் சேர்த்த இடத்தில் கருணாநிதியின் பொன்னோவியம் - நெகிழும் வைரமுத்து

எந்த இடம் இனத்திற்கும், மொழிக்கும் புகழ் சேர்த்த இடமோ அந்த இடத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவப்படம் வைக்கப்படுவதாக கவிப்பேரரசு வைரமுத்து தெரிவித்துள்ளார்.

கிராம சபைக் கூட்டம் நடத்தக்கோரி மநீம தலைவர் கமல் மனு

கிராமசபைக் கூட்டம் நடத்தக்கோரி கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் மனு அளித்துள்ளார்.

பஞ்சாபில் பள்ளிகள் திறப்பு

கரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் பஞ்சாப் மாநிலத்தில் இன்று (ஆக. 2) பள்ளிகள் திறக்கப்பட்டன.

விரைவில் சமூக வலைதள மூத்த நிர்வாகிகள் - ஐடி அலுவலர்கள் சந்திப்பு

ஹைதராபாத்: ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் போன்ற சமூக வலைதளங்களின் மூத்த நிர்வாகிகள் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் அலுவலர்களை சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் என்ன?

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102.49 ரூபாய்க்கும் டீசல் லிட்டருக்கு 94.39 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதிச் சுற்றுக்குத் தேர்ச்சி பெறத் தவறிய ட்யூட்டி!

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய நட்சத்திர ஓட்டப் பந்தய வீராங்கனை ட்யூட்டி சந்த், அரையிறுதிப் போட்டிக்குத் தகுதிபெறத் தவறி வெளியேறினார்.

ABOUT THE AUTHOR

...view details