தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

9 மணி செய்திகள் top 10 news @ 9 PM - etv bharat top ten news nine pm

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திகள்

etv bharat top ten news nine pm
etv bharat top ten news nine pm

By

Published : Jul 31, 2021, 9:23 PM IST

துணை நகருக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை - சென்னை உயர் நீதிமன்றம் தடை

திருப்போரூர் அருகே திருவிடந்தை கிராமத்தில் அமைக்கப்படும் துணை நகரத்துக்கு செல்ல ஏரிகளின் குறுக்கே சாலை அமைக்க தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'தமிழ்நாட்டில் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றதற்கு முக்கியக் காரணம் கருணாநிதி'

தமிழ்நாட்டில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்து பெரும்பாலானோர் வேலைவாய்ப்பைப் பெற்றனர் என்பது அனைவரும் அறிந்த விஷயமே என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது - உயர் நீதிமன்ற மதுரை கிளை

அரசு மதுபானக் கடைகளை மூடக்கோரிய வழக்கில், அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.

கரோனா பரிசோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் - மாநகராட்சி வேண்டுகோள்!

ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அம்மா உணவகப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்: பெண்கள் சாலை மறியல்

திண்டுக்கல் மாநகராட்சி மேற்பார்வையில் உள்ள அம்மா உணவகங்களில் பணியாற்றிவந்த பெண்களை திடீரென வேலையிலிருந்து நிறுத்தியதால் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - பரபரப்பு

சென்னை திருமங்கலத்தில் உள்ள பிரபல வணிக வளாகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

ஆகஸ்டில் வங்கி ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. 9 நாள்கள் விடுமுறை

ஆகஸ்ட் மாதத்தில் வங்கிகளுக்கு ஒன்பது நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

TNPL 2021: மதுரை பாந்தர்ஸ் vs நெல்லை கிங்ஸ்; மதுரை நிதானம்

டிஎன்பில் தொடரில் மதுரை, நெல்லை அணிகளுக்கு இடையிலான 17ஆவது லீக் ஆட்டத்தில், டாஸ் வென்ற நெல்லை அணி பந்துவீச்சைத் தேர்வுசெய்தது.

டோக்கியோ ஒலிம்பிக் 10ஆவது நாள்: இந்தியாவின் முக்கியப் போட்டிகள்

ஒலிம்பிக் தொடரின் 10ஆம் நாளான நாளை (ஆக்.1) இந்தியா சார்பில் பங்கேற்கும் முக்கிய வீரர்கள், போட்டிகள் குறித்த தொகுப்பு.

ஆகஸ்ட் 1இல் அமல்., ஏடிஎம் கட்டண உயர்வு ஏன்? ரிசர்வ் வங்கி விளக்கம்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் வங்கி ஏடிஎம் கட்டணங்கள் உயர்கின்றன.

ABOUT THE AUTHOR

...view details