தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்தி சுருக்கம் TOP 10 NEWS @ 9 AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am

By

Published : Aug 21, 2021, 8:59 AM IST

முதுமைக்கு ஓர் மரியாதை உண்டு

மூத்த குடிமக்களின் ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும், நலனையும் காக்க வேண்டியது குறித்து விழுப்புணர்வு ஏற்படுத்தும்விதமாக இன்று (ஆகஸ்ட் 21) உலக மூத்த குடிமக்கள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

தொழில்நுட்ப கருவிகளில் மோசடி: வெளியானது காவல் துறையின் பட்டியல்

தமிழ்நாடு காவல் துறைக்கு தொழில்நுட்ப உபகரணங்கள் வாங்கிய முறைகேட்டில், முதல் தகவல் அறிக்கையில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 14 காவல் அலுவலர்களின் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

செந்தில்பாலாஜியின் ட்விட்டர் பதிவால் பரபரப்பு

திமுக ஆட்சியில் நிலக்கரியைக் காணவில்லை என்ற மாரிதாஸின் பதிவுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார்.

வேலைவாய்ப்பிற்காகப் பதிவு செய்தவர்கள் குறித்த புள்ளி விவரம் வெளியீடு

தமிழ்நாட்டில் 70 லட்சத்து 30 ஆயிரத்து 345 நபர்கள் வேலைவாய்ப்பிற்காகப் பதிவுசெய்துள்ளனர் எனவும், இதில் பதிவுசெய்த 11 ஆயிரத்து 213 பேர் 58 வயதிற்கும் மேற்பட்டவர்கள் எனவும் வேலைவாய்ப்புத் துறை இயக்குநரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது

தூத்துக்குடி அதிமுக பிரமுகர் கொலைசெய்யப்பட்ட வழக்கில் நான்கு பேரை ஏவல் காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

HBD ராதிகா: பப்ளி பெண்ணாய் அறிமுகமாகி திரை ஆளுமையாக உருவெடுத்த லேடி சூப்பர் ஸ்டார்!

ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகள் வெள்ளித் திரையில் நுழைந்து சோர்ந்து போய் தங்கள் நடிப்புப் பயணத்துக்கு பை பை சொல்லி வந்த காலம் அது. ஆனால் தன் சித்தி தொடரின் மூலம் ராதிகா செய்தது ஹீரோயினிசத்தின் உச்சம். ஆண்கள் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாத்துறையில் தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்துள்ளார் ராதிகா.

மக்களைக் காண பாதாளத்திலிருந்து பூலோகம் வரும் மகாபலி - ஓணம் வரலாறு!

ஒவ்வொரு ஆண்டும் மகாபலி மன்னர் இந்தப் பூமிக்கு வருகைதரும் நன்னாளே ஓணம் பண்டிகை என்று கொண்டாடப்படுகிறது. இந்நாள், கேரள மக்களின் அறுவடைத் திருவிழா என்றும் கொண்டாடப்படுகிறது.

பாஜகவுக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தில் திமுக பங்கெடுக்கும் - ஸ்டாலின்

மத்திய அரசைக் கண்டித்து வரும் செப். 20ஆம் தேதிமுதல் செப். 30ஆம் தேதிவரை நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.

ஒடிசா உப்பு சத்தியாகிரக நினைவிடம்.. தேசிய அங்கீகாரம் கிடைக்குமா?

கடல் அரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக நாட்டின் இரண்டாவது உப்பு சத்தியாகிரம் நடைபெற்ற இடமாக அறியப்படும் ஒடிசாவின் இஞ்சுடி அழிந்துவருகிறது. இதற்கிடையில், ஒடிசா உப்பு சத்தியாகிரக நினைவிடத்துக்கு தேசிய அங்கீகாரம் கிடைக்கவில்லையென்ற ஆதங்கமும் வலுத்துவருகிறது.

'ஹரியானாவில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் யாரும் உயிரிழக்கவில்லை'

ஹரியானா மாநிலத்தில் கரோனா தொற்று காலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்பு எதுவும் நிகழவில்லை என அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details