தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்தி சுருக்கம் Top 10 News @ 9AM

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கம்..

etv bharat top ten news nine am
etv bharat top ten news nine am

By

Published : Aug 17, 2021, 9:01 AM IST

முதலமைச்சருக்கு எதிரான அவதூறு வழக்கு - அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை திரும்பப்பெறுவது தொடர்பாக உயர் நீதிமன்ற ஒப்புதலை பெறும்படி தமிழ்நாடு அரசிற்கு சிறப்பு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.11.8 லட்சம், ஆவணங்கள் பறிமுதல்

அதிமுக பிரமுகர் வீட்டில் நடத்திய சோதனையில் 11.80 லட்சம் ரூபாய், முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

எந்த ஒரு பணிக்கும் முழு முயற்சி வேண்டும் - ஓதுவார் சுஹாஞ்சனா

எந்த ஒரு பணியாக இருந்தாலும் நாம் செய்யக்கூடிய முயற்சி முழுமையாக இருந்தால் அதற்குண்டான வெற்றி கண்டிப்பாகக் கிடைக்கும் என பெண் ஓதுவார் சுஹாஞ்சனா தெரிவித்துள்ளார்.

பணி வழங்குங்கள் - முதல் பெண் ஓதுவார் கோரிக்கை

ஊதியம் குறைவு என்பதால் ஓதுவார் பணியை கைவிட்ட திருச்சியைச் சேர்ந்த முதல் பெண் ஓதுவார் அங்கயற்கண்ணி தனக்கு மீண்டும் பணி வாய்ப்பு கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சுருக்குமடி வலை... மீனவர்களிடையே தகராறு: ஆட்சியர் வரை சென்றது விவகாரம்!

மயிலாடுதுறை மாவட்டத்தில் சுருக்கு மடிவலை எதிர்ப்பு, ஆதரவு மீனவர்கள் தனித்தனியே ஆட்சியரிடம் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

96 போல் 86 - பள்ளி கால பசுமை நினைவுகள் சந்திப்பு

ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் 1985-86ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த மாணவ, மாணவியர்கள் 35 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்திக்கும் நிகழ்வு நேற்று (ஆக. 16) நடைபெற்றது.

ஆரம்ப சுகாதார நிலையத்தை, மருத்துவமனையாக தரம் உயர்த்த மனு - பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ். மங்கலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை, தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

போராடி வென்ற மயான பாதை: போராட்டத்தில் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்

கரூரில் சுதந்திர தினத்தன்று மயான பாதை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பாதை அமைக்கப்பட்டது.

ஹெலிகாப்டர் முழுக்க பணம்- தப்பியபோது அஷ்ரப் கானி செய்தது என்ன?

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கானி, ஹெலிகாப்டர் முழுவதும் பணத்தை நிரப்பிக்கொண்டு சென்றதாக ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மனித உரிமை மீறல்கள் - ஐ.நா. கவலை

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலை, மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கவலை தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details