தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

11 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS 11 AM

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

etv bharat top ten news eleven am
etv bharat top ten news eleven am

By

Published : Aug 19, 2021, 11:08 AM IST

'சமூகநீதிக் காவலர் மோடியின் ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை இல்லை'

ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் அளித்து பிரதமர் மோடி சமூகநீதிக் காவலராகத் திகழ்வதாகவும், பாஜக ஆட்சியில் விவசாயிகள் தற்கொலை செய்வது கிடையாது என்றும் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

'ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாட வேண்டிய நாள்'

இறைவன் கூலித்தொழிலாளியாக வந்து, வேலை சரியாகச் செய்யவில்லை என்றால் தண்டனை கிடைக்க வேண்டுமென்ற திருவிளையாடலை நிகழ்த்திய ஆவணி மூலத்திருநாளே தொழிலாளர் நாளாகக் கொண்டாடப்பட வேண்டிய நாள் என தருமபுரம் ஆதீனம் பேசியுள்ளார்.

’கொடநாடு விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிடுக’ - கே. பாலகிருஷ்ணன்

கொடநாடு விவகாரத்தில் மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

382ஆவது மெட்ராஸ் தினம்: பொதுமக்களுக்குப் போட்டிகள் நடத்த உள்ள மாநகராட்சி

மெட்ராஸ் தினத்தினைக் கொண்டாடும் வகையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தூய்மைப் பணி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்படவுள்ளன.

ஆளுநரை இன்று சந்திக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்: திமுக அரசுக்கு எதிராக புகார்?

திமுக அரசு மீது புகார் அளிக்க அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் இன்று (ஆக. 19) ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்துப் பேச உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

புதுமையான யுக்தியே விருதுபெறக் காரணம் - 'நல்லாசிரியர்' லலிதா

புதுமையான யுக்தியைக் கையாண்டு மாணவர்களுக்கு கல்வியைப் போதித்ததன் காரணமாகத்தான் நல்லாசிரியர் விருதுக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேசிய நல்லாசிரியர் விருதுபெற்ற தலைமை ஆசிரியை லலிதா தெரிவித்துள்ளார்.

உலகம் எங்கள் நாட்டை கைவிடக் கூடாது - ஆப்கன் அகதிகள்

உலக நாடுகள் தங்களது நாட்டு மக்களைக் கைவிடாமல், அடைக்கலம் கொடுக்க முன்வர வேண்டும் என்று டெல்லியில் வாழும் ஆப்கன் அகதிகள் கோரிக்கைவைத்துள்ளனர்.

மாற்றுத் துணி, காலணிகளுடன்தான் சென்றேன்’ - ஆப்கனை விட்டு வெளியேறிய அதிபரின் முதல் பதிவு!

அஷ்ரப் கானி நான்கு கார்களில் பண மூட்டைகளுடன் தப்பிச் சென்றதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, தான் அணிந்திருந்த உடைகள், மாற்றுத் துணி, காலணிகளுடன் மட்டுமேதான் நாட்டைவிட்டு வெளியேறியதாகப் பதிவிட்டுள்ளார்.

’வாழ்வின் தருணங்களை உறையவைப்போம் வாருங்கள்’ - உலகப் புகைப்பட தினம்

நிகழ்காலத்தின் தருணங்களை உறையவைத்து, அக்காலத்துக்கே எதிர்காலத்தில் நம்மை மீண்டும் கூட்டிச் செல்லும் விந்தையை புகைப்படங்கள் நிகழ்த்துகின்றன. இந்தப் புகைப்படங்கள் நினைவுகளை மட்டுமல்லாது, நாம் அன்று உணர்ந்த மகிழ்ச்சியையும் களிப்பையும் உடன் மீட்டுத்தருகின்றன.

'ஆப்கனில் உள்ள இந்தியர்களை மீட்பதே முதன்மை நோக்கம்' - வெளியுறவுத் துறை அமைச்சர்

ஆப்கானிஸ்தானில் நடக்கும் விவகாரங்களை உன்னிப்பாக கவனித்துவருவதாகவும், ஆப்கனில் உள்ள இந்தியர்களை பத்திரமாக மீட்பதே முதன்மை நோக்கம் என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details