தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am - etv bharat top 10

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

etv-bharat-top-ten-news-dec-fourteen
etv-bharat-top-ten-news-dec-fourteen

By

Published : Dec 14, 2020, 9:11 AM IST

இன்றைய சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது!

டெல்லி: இந்தாண்டின் இரண்டாவதும், கடைசியுமான சூரிய கிரகணம் இன்று (டிச.14) நிகழவுள்ளது.

டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தலைமைச் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்!

மும்பை: டிஆர்பி முறைகேடு விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டுள்ள ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமைச் செயல் அலுவலரை இரண்டு நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூளையில் அறுவை சிகிச்சை செய்தபோது பியானோ வாசித்த சிறுமி!

லக்னோ: மத்தியப் பிரதேசத்தில் சிறுமியின் மூளையில் சிக்கலான அறுவை சிகிச்சை செய்தபோது, அவர் பியானோ வாசித்த காணொலி வைரலாகப் பரவிவருகிறது.

குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணிக்கு 'அதிகார பசி' - ஸ்மிருதி இரானி

ஜம்மு-காஷ்மீர்: குப்கார் தீர்மானத்துக்கான மக்கள் கூட்டணிக்கு காஷ்மீர் மக்களின் நலனில் அக்கரையில்லை என்றும், அவர்களுக்கு அதிகார பசி மட்டுமே உள்ளது என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விமர்சித்துள்ளார்.

மலேசியாவில் 70% மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள்!

கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள 70 விழுக்காடு மக்களுக்கு கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்க, நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாக அந்நாட்டு பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

சவுதி ராணுவத் தளபதியுடன் இந்திய ராணுவத் தளபதி பேச்சுவார்த்தை!

ரியாத்: இந்தியா-சவுதி அரேபியா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து அந்நாட்டு உயர்மட்ட அலுவலர்களுடன் இந்திய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஊழியர்களுக்கு கரோனா: குருவாயூர் கோயில் இரு வாரங்களுக்கு மூடல்!

திருவனந்தபுரம்: குருவாயூர் கிருஷ்ணா கோயில் ஊழியர்களுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கோயில் இரு வாரங்களுக்கு மூடப்பட்டுள்ளது.

'மநீம ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும்' - கமல்

மதுரை: மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் மது விற்பனை தனியாரிடம் ஒப்படைக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஐஏஎஸ் படித்த அலுவலர்களை வைத்து மது விற்பனை நடைபெறுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐஎஸ்எல்: கேரளாவை புரட்டியெடுத்த பெங்களூரு!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று (டிசம்பர் 13) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.

செம்பருத்தி தொடரிலிருந்து நீக்கப்பட்ட பிரபலம்!

சென்னை: செம்பருத்தி தொடரிலிருந்து நடிகர் கார்த்திக் ராஜ் நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details