தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 7 மணி செய்திச் சுருக்கம் TOP 10 NEWS - ஈடிவி பாரத்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

TOP 10 NEWS
TOP 10 NEWS

By

Published : Sep 10, 2021, 7:03 AM IST

1.தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவியை நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

2.விநாயகர் சதுர்த்தி - பாதுகாப்புப் பணியில் 20,000 போலீசார்

சென்னையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 20 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளதாக சென்னை காவல் துறை தெரிவித்துள்ளது.

3.வருமான வரி தாக்கல் அறிக்கைகளுக்கான கடைசி தேதிகள் நீட்டிப்பு

வருமான வரி தாக்கல், பல்வேறு தணிக்கை அறிக்கைகளுக்கான கடைசி தேதிகளை ஒன்றிய நேரடி வரிகள் வாரியம் நீட்டித்துள்ளது.

4.தமிழரின் பண்பாட்டு அடையாளங்களை தேடி உலகம் முழுவதும் பயணம் - மு.க. ஸ்டாலின்

கீழடி அகழாய்வு உலக அளவில் கவனத்தைப் பெற்றுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்தோனேசியா, தாய்லாந்து மலேசியா, உள்ளிட்ட நாடுகளில் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும், தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி உலகெங்கும் பயணம் செய்வோம் என்றும் அவர் கூறினார்.

5.திமுக நகரச் செயலாளர் அடாவடி? நியாயம் கேட்டு தீக்குளிக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு

கலைவாணர் அரங்கம் அருகே தீக்குளிக்க முயன்ற நபர் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

6.திருமணி முத்தாறில் செல்லும் கழிவு நீர்!

சேலம் திருமணி முத்தாறில் நூற்பாலை கழிவுகள் நேரடியாக கலப்பதாகவும், இதனைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

7. தமிழ்நாட்டில் ஊரடங்கு நீட்டிப்பு: எவைக்கு அனுமதி

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

8. திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களை தனியார்மயமாக்க அரசு ஒப்புதல்

திருச்சி உள்ளிட்ட 13 விமான நிலையங்களைத் தனியார்மயமாக்க இந்திய விமான நிலைய ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.

9. ’மற்ற படங்களை வச்சு செய்யுங்க...’ - விஜய் ஆண்டனியின் குபீர் பேச்சு!

நல்ல படங்களுக்கு ஆதரவளித்து, மற்ற படங்களை வச்சு செய்யுங்க என சென்னையில் நடைபெற்ற 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

10. முடிவுக்கு வந்தது 'டாக்டர்' பஞ்சாயத்து!

நீண்ட காலமாக இழுபறியில் இருந்துவந்த 'டாக்டர்' திரைப்படத்தின் வெளியீட்டு அறிவிப்பு பிரச்சினை முடிவுக்கு தற்போது வந்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details