தமிழ்நாடு

tamil nadu

7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7PM

By

Published : Nov 17, 2020, 6:49 PM IST

ஈடிவி பாரத்தின் 7 மணி செய்திச் சுருக்கம் இதோ...

7PM
7PM

1. தமிழ்நாட்டில் 5ஆவது நாளாக 2ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கரோனா!

தமிழ்நாட்டில் இன்று(நவ.17) 1,652 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

2. துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு சென்னை வருகை

சென்னை: அரசு முறை பயணமாக துணை குடியரசுத் தலைவர் வெங்கயா நாயுடு சென்னை வந்துள்ளார்.

3. தொடர் தோல்வியில் காங்கிரஸ்: தலைமைக்கு எதிராக பொங்கும் மூத்தத் தலைவர் யார்?

டெல்லி: பிகார் தேர்தல் தோல்வி காரணமாக அக்கட்சியின் மூத்தத் தலைவர் கபில் சிபல் ராகுல் காந்தியை விமர்சித்த நிலையில், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் மற்ற மூத்தத் தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர்.

4. ”தேச நலனுக்கு எதிரான கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்” - அமித் ஷா

டெல்லி : தேச நலனுக்கு எதிரான தூய்மையற்ற கூட்டணியை மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

5. தேசிய வலிப்பு நோய் தடுப்பு நாள் : ஆரம்பகால நோயறிதல் பாதிப்பைக் குறைக்கும்!

மூளையில் திடீரென மின் உற்பத்தி அதிகமாகும்போது ஏற்படும் வலிப்பு நோய் தொடர்பான பல முக்கியத் தகவல்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

6. டெல்லியில் கரோனா அதிகரிக்க இதுதான் காரணம் - சுகாதாரத் துறை அமைச்சர்

டெல்லி: வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம் பரிசோதிக்கப்படுவதாலேயே டெல்லியில் கடந்த சில நாள்களாக கரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

7. மேலும் மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கம்!

சென்னை: அகமதாபாத், ஷாலிமார், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மூன்று சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல் தொடங்குகிறது.

8. புற்றுநோயால் வாடும் தவசிக்கு முன்வந்து உதவும் நடிகர்கள்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக பண உதவி கோரியிருந்த நடிகர் தவசிக்கு சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் நிதியுதவி வழங்கியுள்ளனர்.

9. சூர்யா அண்ணா அட்டகாசம்... அபர்ணா அற்புதம்: உணர்ச்சிவசப்பட்ட விஜய் தேவரகொண்டா

சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' படத்தை பார்த்து விஜய் தேவரகொண்டா வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

10. ஓய்வுபெற்ற மாஸ்செரானோவுக்கு மெஸ்ஸி, நெய்மர், ஸாவி பாராட்டு...!

சமீபத்தில் அனைத்துவிதமான கால்பந்து போட்டிகளிலில் இருந்தும் ஓய்வை அறிவித்த மாஸ்செரானோவை பாராட்டி நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி, நெய்மர், ஸாவி ஆகியோர் பதிவிட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details