தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

7 மணி செய்தி சுருக்கம் - Top 10 news @ 7 AM - ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்தி சுருக்கம்...

etv bharat top 10 news
ஈடிவி பாரத் டாப் 10 செய்திகள்

By

Published : Mar 20, 2021, 7:46 AM IST

ஆட்சிக்கான தேர்தல் அல்ல; சுயமரியாதைக்கான தேர்தல்!

திருப்பூர்: திராவிட மண்ணான தமிழகத்தில் மதவெறியை தூண்டும் பாஜகவின் மோடி மஸ்தான் வேலை பலிக்காது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

டீசல், சிலிண்டர் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடியிடம் கேட்டால் 'கியா கியா' என்பார் - சீமான் கிண்டல்

தூத்துக்குடி: டீசல், சிலிண்டர் விலை உயர்வு பற்றி பிரதமர் மோடியிடம் கேட்டால் கியா கியா என்பார் என நாம் தமிழர் கட்சி சீமான் விமர்சித்துள்ளார்.

கரோனா 2ஆவது அலை? மத்தியப் பிரதேசத்தில் ஊரடங்கு!

போபால்: கரோனா பரவல் மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மத்தியப் பிரதேசத்தின் முக்கிய நகரங்களில் மீண்டும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் இட ஒதுக்கீடு குறித்து பாடம் எடுத்த திமுக எம்பி வில்சன்!

டெல்லி: இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மாநிலங்களின் அதிகாரத்தைத் தடுத்திட வேண்டாம் என்று மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் பி. வில்சன் வலியுறுத்தியுள்ளார்.

இங்கெல்லாம் டிரைவ் பண்ண ஆசைப்படாதீங்க!

உலகில் எங்கு வேண்டுமானாலும் கார், பைக் ஓட்டுங்க. ஆனால் இங்கெல்லாம் வேண்டாம். சர்வதேச அளவில் மோசமான சாலை வசதிகள் கொண்ட நாடுகளை பார்க்கலாம்.

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அபராதம் - ஐசிசி உத்தரவு

இந்தியாவுக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதால், இங்கிலாந்து அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 20 விழுக்காடு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

'இலையில் விசில், எருக்கம் பூ விளையாட்டு' - 90ஸ் கிட்ஸின் உணர்வுகளை தூண்டி விட்ட மன்சூர்

கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில், சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் தமிழ் தேசிய புலிகள் கட்சியின் தலைவர் மன்சூர் அலிகான் காந்தி பூங்காவில் நடைப்பயிற்சி மேற்கொண்டு தனக்கே உரிய நயாண்டித்தனத்துடன் பொதுமக்களிடம் கலந்துரையாடினார். தொடர்ந்து இலையில் விசிலடித்தல், எருக்கம் பூவை கிள்ளி விளையாடுதல் என 90ஸ் கிட்ஸ் விளையாடி 2K கிட்ஸை கவர்ந்தார்.

வாசிப்பு பழக்கமே இல்லை: வைரலான மநீம வேட்பாளர் விவகாரத்தில் வெங்கடேஷ் ஆறுமுகம் விளக்கம்

"இதுல ஒரு பெரிய காமெடி என்னவென்றால், இந்தப் பதிவை பார்த்துவிட்டு பழனியில் இருக்கும் ஒரு சித்தர் மடத்திலிருந்து என்னை கூப்பிட்டு இதை எங்கேர்ந்து எடுத்திங்க என்று கேட்டார்கள்".

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா: புகார் அளித்த தேர்தல் அலுவலர்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யும் வீடியோ தொடர்பாக, தேர்தல் பறக்கும் படை அலுவலர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

'ஆர்ஆர்ஆர்' படத்தில் ஆலியா நடித்த கதாபாத்திரத்தின் நீளத்தை அதிகரிக்க முடிவு?

ராம் சரண் - ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகிவரும் 'RRR' படத்தில் ஆலியா பட் நடித்த கதாபாத்திரத்தின் நீளத்தை அதிகரிக்க படக்குழு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ABOUT THE AUTHOR

...view details