தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஈடிவி பாரத் 5 மணி செய்திகள் Top 10 news @5pm - ஈடிவி பாரத் டாப் செய்திகள்

ஈடிவி பாரத்தின் 5 மணி செய்திகள்...

Top 10 news @5pm
ஈடிவி பாரத் 5 மணி செய்திகள்

By

Published : Apr 23, 2021, 5:27 PM IST

80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் - மத்திய அரசு

கரோனா பரவல் காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நெரிசலில் சிக்காமல் செல்ல விரைவில் வருகிறது விமான டாக்ஸி

சென்னை: போக்குவரத்தில் சிக்காமல் நெரிசலின்றி பயணிக்கும் வகையில் சென்னை ஐஐடியின் விமான தொழில் நுட்பப் பொறியியல் துறையினர் நினைத்த இடத்தில் தரையிறங்கும் வகையிலான விமான டாக்ஸியினை வடிவமைத்துள்ளனர்.

'வாக்கு எண்ணிக்கை நாளில் அரசியல் கட்சியினருக்கு கரோனா பரிசோதனை'

சென்னை: வாக்கு எண்ணிக்கையின்போது கலந்துகொள்ள இருக்கும் வேட்பாளர்கள், கட்சியின் அதிகாரப்பூர்வ முகவர்களுக்கு கரோனா பரிசோதனை முடிவு ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிக நிறுத்தம் - ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

வெளிப்புற சிகிச்சைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

’விவேக் மகள் இறுதிச்சடங்கு செய்தது வியப்பாக இருந்தது’ - சினேகன்

சென்னை வடபழனி குமரன் காலனியில் விவேக்கிற்கு நினைவஞ்சலி நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். அப்போது பேசிய சினேகன், ’விவேக் மகள் இறுதிச்சடங்கு செய்தது எனக்கு மிகவும் வியப்பாக இருந்தது’ என கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரிலிருந்து நடராஜன் விலகல்!

ஹைதராபாத்: காயம் காரணமாக ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் ஐபிஎல் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

கரோனா தடுப்பு மருந்துகள் கையிருப்பில் உள்ளது`-துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்

புதுச்சேரி: கரோனா தனி கவனிப்பு மையத்தை ஆய்வு செய்த பிறகு செய்தியாளரை சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், தேவையான கரோனா தடுப்புமருந்துகள் கையிருப்பில் உள்ளதாக தெரிவித்தார்.

தண்ணீரில் மூழ்கிய ஜீப்: 9 பேர் உயிரிழப்பு!

பாட்னா: பிகாரிலுள்ள பீபா பாலத்தின் மீது ஜீப் மோதிய விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

இந்திய வம்சாவளிப் பெண்ணுக்கு அமெரிக்கா நீதித்துறையில் உயர் பொறுப்பு!

இந்திய வம்சாவளிப் பெண்ணான வனிதா குப்தா அமெரிக்காவின் இணை அரசு வழக்கறிஞராக தேர்வாகியுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details