தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM - இளையராஜா

ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம் இதோ...

5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM
5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @5PM

By

Published : May 14, 2021, 5:15 PM IST

'விரைவில் மருத்துவமனையில் இடப்பற்றாக்குறை குறையும்' - மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்

ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள பேருந்துகள், தன்னார்வலர்கள் வழங்கியுள்ள ஆக்சிஜன் செறிவூட்டிகள் விரைவில் செயல்பாட்டுக்கு வந்ததும் மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை குறையும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் - முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை:ஸ்டெர்லைட் ஆலையை மூட நடத்தப்பட்டப் போராட்டத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக, விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் இடைக்கால அறிக்கை இன்று(மே 14) தாக்கல் செய்யப்பட்டது.

மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை - ஏன் தெரியுமா?

அரபிக் கடலில் புயல் வர வாய்ப்புள்ளதாக மீனவர்களுக்கு வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஊரடங்கு விதிகள் பின்பற்றாத சூழல்: கெடுபிடி அதிகரிப்பு

கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கில் தொய்வு ஏற்பட்டுள்ளதால், இன்று (மே.14) முதல் காவல் துறையினர் கெடுபிடிகளை அதிகரித்துள்ளனர்.

முதல் ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஹைதராபாத்தில் செலுத்தப்பட்டது

இந்திய மருந்து தர கட்டுப்பாட்டின் அனுமதியுடன் இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் வி தடுப்பூசி முதல் முதலாக ஹைதராபாத்தில் இன்று (14-05-2021) செலுத்தப்பட்டது.

கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை: 76 கரோனா நோயாளிகள் உயிரிழப்பு

பனாஜி: கோவாவில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 76 கரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

45 வருடங்கள்... இளையராஜாவுக்கு 3 தலைமுறை பலம் உண்டு

இளையராஜா இன்னமும் உயிர்ப்புடன் இருக்க காரணம் இளையராஜா மட்டுமே. அவர் தோப்பில் இருந்தாலும் தனி மரமாகவே வளர்ந்தார், சில தோப்புகளையும் தனி ஆளாகவே உருவாக்கினார்.

பிரபல சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!

சென்னை: தொலைக்காட்சி தொடர் நடிகர் குட்டி ரமேஷ், உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

யுவன் - அமீன் இணைந்து பாடிய 'தலா அல் பத்ரு அலைனா' தனித்துவப் பாடல்!

சென்னை: ஈகைத் திருநாள் கொண்டாட்டமாக யுவன் சங்கர் ராஜாவும் ஏ.ஆர். ரஹ்மானின் மகன் அமீனும் இணைந்து 'தலா அல் பத்ரு அலைனா' என்னும் இசை ஆல்பத்தில் இணைந்து பாடியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details