தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am - top news

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am
காலை 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9am

By

Published : Dec 10, 2020, 9:09 AM IST

1.புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை இன்று (டிச. 10) பிரதமர் நரேந்திர மோடி நாட்டுகிறார்

2.'வேளாண் சட்டம் விவசாயிகளை அவமதிக்கிறது' - ராகுல் காந்தி

நாட்டில் உள்ள விவசாயிகளை வேளாண் சட்டம் அவமதிக்கிறது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

3.'பிஎம்-வானி திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும்' - பிரதமர் நரேந்திர மோடி

பிஎம்-வானி திட்டம் தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் நாட்டில் வை-பை இணைய சேவையை விரிவுப்படுத்தும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

4.ஜம்மு காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி தாரிக் அகமது பாட் ஜம்மு காஷ்மீர் காவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டார்.

5.விடுதலை நாளிதழ் கோயில்!

சத்தீஸ்கர் மாநிலம் தம்தாரி மாவட்டத்தின் தலைநகரிலிருந்து ஏறக்குறைய 65 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சத்தியாரா கிராமம். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி நாடு விடுதலை அடைந்ததை நவ பாரத் நாளிதழ் மூலமாகவே கிராம மக்கள் அறிந்து கொண்டனர். ஒன்றரை மாதத்துக்குப் பின்னர் கிடைத்த நாளிதழின் பிரதியை இன்றும் புனிதமிக்கதாக கருதி அந்தச் செய்தித்தாளை தெய்வமாகவே வணங்குகின்றனர்.

6.76 லட்ச மக்களுக்கு இலவச உணவு வழங்கிய தமிழ்நாடு அரசு

கடந்த நான்கு நாள்களில் 76 லட்சத்து 39 ஆயிரத்து 708 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டுள்ளது என மாநகராட்சி தெரிவித்துள்ளது

7.அமராவதி ஆறு மாசு குறித்து ஆய்வுசெய்து தாக்கல்செய்ய உத்தரவு!

அமராவதி ஆற்றுப் பகுதியில் உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் ஐந்து பல்வேறு இடங்களில் நீரின் மாதிரிகளை எடுத்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை கிங்ஸ் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி அறிக்கை தாக்கல்செய்ய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

8.விவசாயிகள் போராட்டம் இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினையா? குழப்பிய இங்கிலாந்து பிரதமர்!

வேளாண் சட்டத்தை எதிர்த்து இந்திய விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை, இந்தியா-பாகிஸ்தான் பிரச்சினை என்று நினைத்து இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தவறாக பதில் அளித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

9.கோவிட்-19 தாக்கம்: செயற்கை நுண்ணறிவுத் துறையில் எழுச்சிகண்ட இந்தியா!

கோவிட்-19 வருகைக்குப் பின்னர் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்திய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

10.குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குநர் பா. இரஞ்சித் எதிர்ப்பு!

தீவுத்திடல் அருகே காந்திநகர் குடிசைவாழ் மக்களை வெளியேற்ற இயக்குநர் பா. இரஞ்சித் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details