தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 5 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 5 PM - today news

ஈடிவி பாரத்தின் மாலை 5 மணி செய்திச் சுருக்கம்.

Top 10 news @5pm
Top 10 news @5pm

By

Published : Dec 18, 2020, 5:22 PM IST

1.தலைமை அலுவலகத்தின் மின்நிலையப் பராமரிப்பு தனியாரிடம் ஒப்படைப்பு!

தொடரும் தனியார்மயமாக்கல் நடவடிக்கைகளை ஒட்டி, தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்திலேயே துணை மின்நிலைய பராமரிப்புப் பணி, அரசு சாரா நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

2.மின்சார வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

தமிழ்நாட்டில் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் செயலை கண்டித்து மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவது குறித்து தொழிற்சங்கங்கள் இன்று (டிச. 18) அறிவிப்பு வெளியிடுகின்றன.

3.தியானம் செய்ய இளையராஜாவுக்கு ஏன் அனுமதி அளிக்கக்கூடாது?

பிரசாத் ஸ்டுடியோவில் ஒரு நாள் தியானம் செய்து கொள்ள இசையமைப்பாளர் இளையராஜாவை ஏன் அனுமதிக்கக்கூடாது என பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4.தமிழ்நாட்டில் கரோனா தடுப்பூசி: 'முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார்' - வெல்லமண்டி நடராஜன்

கரோனாவுக்கான தடுப்பூசி விரைவில் வரவுள்ளது, இதுகுறித்த அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்தார்.

5.ஈமு கோழி மோசடி வழக்கு : பெண் காவலர் உள்பட 3 பேருக்கு 10 ஆண்டுகள் சிறை!

கோபிச்செட்டிபாளையத்தில் ஈமு கோழி வளர்ப்புத் திட்டத்தில் மோசடி செய்ததாக பெண் காவலர் உள்பட மூன்று பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6.'அதிமுகவின் வாக்கு வங்கி எந்த நிலையிலும் சிதறாது' - பென்ஜமின்

அதிமுகவின் வாக்கு வங்கி எந்த நிலையிலும் சிதறாது என தமிழ்நாடு ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார்.

7.தடையை மீறி எருது கட்டுத் திருவிழா... காவல் துறை வழக்குப் பதிவு

அலங்காநல்லூர் அருகே தடையை மீறி எருது கட்டுத்திருவிழா நடத்திய விழா கமிட்டியினர் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது

8.ஹத்ராஸ் வழக்கு: 4 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

ஹத்ராஸ் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

9.ஹேமந்த் சோரன் மீதான பாலியல் வன்புணர்வு வழக்கு; காவல்துறைக்கு மகளிர் ஆணையம் கடிதம்

ஹேமந்த் சோரன் மீது மும்பையைச் சேர்ந்த மாடல், 2013ஆம் ஆண்டு அளித்திருந்த பாலியல் வன்புணர்வு வழக்கில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மும்பை காவல் துறைக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

10.அமெரிக்காவில் புயல்: 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் குளிர்கால புயல் காரணமாக ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details