தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm - ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

v
3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm

By

Published : Feb 21, 2021, 4:25 PM IST

1. புதுவையில் தொடரும் ராஜினாமா; திமுக எம்.எல்.ஏ. வெங்கடேசன் பதவி துறப்பு

புதுச்சேரி தட்டாஞ்சாவடி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் வெங்கடேசன் தற்போது ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரியில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், தற்போது ஆளும் காங்கிரஸ் கூட்டணியின் பலம் 12ஆக குறைந்துள்ளது. எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கை 14ஆக உள்ளது.

2.புதுச்சேரி: 5ஆவதாக ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார்.

3.ஆளுநர் மாளிகைக்கு 'குட் பை' சொன்னார் கிரண்பேடி!

முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஆளுநர் மாளிகையிலிருந்து விடைபெற்றார்.

4.ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்ட நிரல்களை வெளியிட்ட அதிமுக

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த தகவல்களை அதிமுக வெளியிட்டுள்ளது.

5.விவசாயிகளின் முதலமைச்சரா ஈபிஎஸ்?

தேர்தல் பரப்புரைகளில் தான் ஒரு விவசாயி என்று கூறிக்கொள்ளும் முதலமைச்சர் பழனிசாமி தொடர்ந்து விவசாயிகளுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தேர்தல் நேரத்தில் விவசாயிகள் மீதான இந்த திடீர் ஆதரவு வாக்குகளாக மாறுமா என்பது தேர்தல் முடிவுக்கு பின்னர் தான் தெரியவரும்.

6.'தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது' - ஸ்டாலின் விமர்சனம்

பழனிசாமி ஆட்சியில் தமிழ்நாடு வெற்றி நடை போடவில்லை, வெத்து நடை தான் போடுகிறது என்று திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

7.'மோடியின் பினாமிதான் அதானி' - திருமாவளவன் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் பினாமிதான் அதானி அவர் நேரடியாக தம்மால் தொழில் நடத்த முடியாது என்பதால் அதானியை வைத்து தொழில் நடத்துகிறார் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பகிரங்கமாக சாடினார்.

8.ஆஸ்திரேலியாவில் முதல் நபராக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிரதமர்

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நாட்டில் முதல் நபராக கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

9.ஆஸ்திரேலியன் ஓபன்: டோடிக், போலசெக் இணை சாம்பியன்!

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் குரோஷியாவின் டோடிக், ஸ்லோவேக்கியாவின் போலசெக் இணை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

10.இபிஎல்: லிவர்பூல் எஃப்சிக்கு அதிர்ச்சியளித்த எவர்டன்!

லிவர்பூல் - எவர்டன் அணிகளுக்கு இடையேயான இபிஎல் லீக் ஆட்டத்தில் எவர்டன் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details