தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

3 மணி செய்தி சுருக்கம் Top 10 news @3pm - top news today

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்தி சுருக்கம்...

TOP 10 NEWS 3 PM
TOP 10 NEWS 3 PM

By

Published : Jan 6, 2021, 3:19 PM IST

1.பொள்ளாச்சி பாலியல் வழக்கு; அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்தும் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்

2.தியேட்டர்களில் உருமாறிய கரோனா பரவும் விதம் - விளக்கும் அட்டவணை

திரையரங்குகளில் கரோனா பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ஐசிஎம்ஆர் மருத்துவர் பிரப்தீப் கவுர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

3.சட்ட விரோதமாக செயல்படும் கடன் வழங்கும் செயலிகள் - நீதிபதிகள் வருத்தம்

கடன் செயலி மூலம் கடன் பெற்று தற்கொலை செய்வது இந்தியாவில் மிக முக்கிய பிரச்னையாக இருந்து வருகிறது. இது வருத்தத்திற்கு உரியது என நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

4.கடலூர், விழுப்புரத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி (Easterly Waves) காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதியில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார்.

5.தனியார் கல்லூரிகளில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழக்கு - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுச்சேரயில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை, மேல்முறையீட்டு வழக்கு இறுதி தீர்ப்புக்குட்பட்டது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

6.103 கிலோ தங்கம் மாயம்: சிபிசிஐடி 3ஆவது முறையாக ஆய்வு

சிபிஐயால் பறிமுதல்செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தில், 103 கிலோ தங்கம் மாயமான சம்பவம் தொடர்பாக மூன்றாவது முறையாக தங்கம் வைக்கப்பட்ட லாக்கரை சிபிசிஐடி அலுவலர்கள் ஆய்வுசெய்து வருகின்றனர்.

7.புதிதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த முதலமைச்சர்!

ஏனாம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள புறக்காவல் நிலையம், சமையல் கூட அரங்கம் ஆகியவற்றை முதலமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்தார்.

8.அனுமதியளிக்கப்பட்டும் கரோனா தடுப்பூசி போட தயக்கம் காட்டும் இந்தியர்கள்!

இந்தியாவில் அனுமதியளிக்கப்பட்ட இரண்டு கரோனா தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள 69% விழுக்காடு இந்தியர்கள் தயக்கம் காட்டிவருவதாக லோக்கல் சர்க்கிள் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

9.ஜோ பைடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்

அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள ஜோ பைடனின் பதவியேற்பு விழாவில், அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் கலந்துகொள்ளவுள்ளார்.

10.கடவுளை அடையும் வழியில் உங்கள் பெயரும் இருக்கும் - பிறந்தநாள் வாழ்த்துகள் ரஹ்மான்

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்று தனது 54ஆவது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். இதையடுத்து அவரது ரசிகர் பட்டாளம் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details