தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மாலை 3 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 3 PM - ஈடிவி பாரத் செய்திகள்

ஈடிவி பாரத்தின் மாலை 3 மணி செய்திச் சுருக்கம்...

etv-bharat-tamil-top-10-news-3-pm
etv-bharat-tamil-top-10-news-3-pm

By

Published : Dec 13, 2020, 3:05 PM IST

அத்திவரதரை தரிசித்த தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்!

காஞ்சிபுரம்: அத்திவரதர் ஸ்ரீ வரதராஜப்பெருமாள் கோயிலில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(டிச.13) தரிசனம் செய்தார்.

செவிலியரைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் - மு.க. ஸ்டாலின்

சென்னை: கரோனா அபாயம் நீங்காத நிலையில், செவிலியரின் சேவை மற்றும் தேவை கருதி அவர்களைப் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

‘பொங்கும் புது வெள்ளத்திற்குச் சிறுமடைகள் தடை ஆகாது’ - பொங்கிய கமல்: காரணம் என்ன?

மதுரை: தனது தேர்தல் பரப்புரைக்கு அனுமதி மறுத்தது குறித்து மநீம தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

'தலைவராக உருவெடுத்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி!'

மதுரை: தமிழ்நாட்டில் தலைவர் இல்லையென்று யார் சொன்னது, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைவராக உருவெடுத்துவிட்டார் எனக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பெருமையுடன் தெரிவித்தார்.

அரசை தோலுரித்துக் காட்டுவேன் - சவால் விடும் ஆ. ராசா

சென்னை: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு குறித்து பேசியதற்காக என்மீது போடப்பட்டுள்ள வழக்கைப் பயன்படுத்தி ஊழலில் திளைக்கும் முதலமைச்சரையும், அதிமுக அரசையும் தோலுரித்துக் காட்டுவேன் என மக்களவை உறுப்பினர் ஆ. ராசா தெரிவித்துள்ளார்.

'ஜனவரியில் தேமுதிக கூட்டணி உறுதி': பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: வரும் ஜனவரியில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் யாருடன் கூட்டணி என்பதை உறுதி செய்வார் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

டிஆர்பி முறைகேடு: ரிபப்ளிக் தொலைக்காட்சி சி.இ.ஓ. கைது!

மும்பை: டிஆர்பி வழக்கு தொடர்பாக ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செயல் அலுவலர் விகாஷ் காஞ்சந்தனி கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய சுகாதார கணக்கெடுப்பு வெளியீடு!

டெல்லி: 5ஆவது தேசிய குடும்ப நலன் மற்றும் சுகாதார கணக்கெடுப்பை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று வெளியிட்டார்.

பாதுகாப்புப் படை நடத்திய என்கவுன்டரில் 3 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை

ஹைதராபாத்: ஆந்திர- ஒடிசா எல்லைப்பகுதியில் மாவோயிஸ்ட் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டனர்.

2001 நாடாளுமன்றத் தாக்குதல்: குடியரசுத் தலைவர், மக்களவை சபாநாயகர் அஞ்சலி

டெல்லி: 2001ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களை நினைவுகூரும்விதமாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

ABOUT THE AUTHOR

...view details