தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today - news today

இன்றைய (ஆகஸ்ட் 25) நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

etv-bharat-tamil-news
etv-bharat-tamil-news

By

Published : Aug 25, 2021, 6:50 AM IST

கூட்டுறவு, உணவுத் துறை மானியக் கோரிக்கை இன்று

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது. இந்த விவாதத்திற்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை துறையின் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர. சக்கரபாணி வெளியிடுகின்றனர்.

அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, அர. சக்கரபாணி

தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இன்று 70ஆவது பிறந்தநாள்

திரையுலகின் கேப்டனும், தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்து தனது 70ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி, கட்சியினரும், அவரது ரசிகர்களும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

விஜயகாந்த்

இன்றைய வானிலை நிலவரம்

இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அத்துடன் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்

டோக்கியோ பாரா ஒலிம்பிக் 2020, எந்தப் போட்டியில் இந்திய வீரர்கள்?

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டாம் நாளான இன்று, டேபிள் டென்னிஸ் தனிநபர் பிரிவு சி-3 பிரிவில் சோனல்பென் மதுபாய் படேல் விளையாடுகிறார். இதேபோல, டேபிள் டென்னிஸ் தனிநபர் பிரிவு சி-4 பாவினா ஹஸ்முக்பாய் படேல் விளையாடுகிறார். மொத்தமாக பாரா ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் 40 ஆண்கள், 14 பெண்கள் என மொத்தம் 54 பேர் கலந்துகொள்கின்றனர்.

டோக்கியோ பாரா ஒலிம்பிக்

ABOUT THE AUTHOR

...view details